மேலும் அறிய
Advertisement
ஜெல் திம்மனுர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும், தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து சென்றது.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜில்திம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குள்ளப்பன் (வயது 60 ). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாய பணிசெய்து கொண்டிருந்தார்.
அப்போது தனது விவசாய நிலத்தில் இருந்து இலைகளை பறிப்பதற்காக தேன்கனிக்கோட்டை வன சரகத்திற்கு உட்பட்ட வன சரக வனத்திற்குள் குள்ளப்பன் சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் இருந்துள்ளது. இந்த நிலையில் குள்ளப்பனை கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோசமாகி குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும், தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கிருந்து சென்றது. இதில் குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்,
அப்போது வனப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள், இதனை கண்டு காயமடைந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயி குள்ளப்பன் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது: தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்கவும் கனிம வளங்களை எடுப்பதற்காகவும் உள்ளே செல்லக்கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்தும் விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் அரசு விதிமுறைகளை மீறி வனப்பகுதிக்குள் செல்வார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion