மேலும் அறிய
நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகை வருவதால், சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது, கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு விலை உயர்ந்து விற்பனையானது. இன்றைய சந்தையில் 5000-க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ. 2 கோடிக்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இறைச்சிக்காக ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம், மேச்சேரி, மேட்டூர், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, ஓசூர் மற்றும கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக ஆடுகளை வாங்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் இருப்பதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விலை உயர்ந்து விற்பனையானது. கடந்த வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 8,000 ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 12000 ரூபாய் வரை விற்பனையானது.
இதனால் ஆடுகளின் விலை 8000 ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. 23 கிலோ எடையுள்ள ஆடு 26 ஆயிரம் ரூபாய்க்கும் 14 கிலோ எடை கொண்ட ஆடு 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தீபாவளி பண்டிகையை இன்று 5,000 ஆடுகள் 2 கோடிக்கு விற்பனையானது. மேலும் தொடர் மழையால் வியாபாரிகள் மற்றும் மற்றும் பொதுமக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. மழையில்லாமல் இருந்தால், இன்னும் கூடுதலாக ஆடு விற்பனைகியிரீக்கும். தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்க்க சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கி சென்றனர். கடந்த வாரம் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் 2,500 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது. இது சந்தைக்கு வர கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகை வருவதால், சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது, கடந்த ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion