மேலும் அறிய
Advertisement
தருமபுரி: இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்பு - புதுப்பித்து தர முதலமைச்சருக்கு கோரிக்கை
தங்களுடைய தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் எடுத்து, இந்த பழுதான வீடுகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என இருளர் சமூக மக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், பீரங்கி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் இந்திரா நகர், பீரங்கி நகர் இரண்டு பகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் தினக் கூலி வேலை செய்தும் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்தும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த இருளர் சமூக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்திரா நினைவு குடியிருப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
அன்றைய காலத்தில் சுமார் 100 குடும்பங்கள் மட்டுமே இருந்து வந்தனர். தற்போது 30 ஆண்டுகளில் கிராம வளர்ச்சி பெற்று ஒவ்வொரு குடும்பத்திலும் 3 பேர், இரண்டு பேர் என இருந்து வருகின்றனர். போதிய வருவாய் இல்லாத காரணத்தால் இடவசதி இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலை இருந்து வருகிறது. மேலும் 30 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் என்பதால் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து விழுந்து, கம்பி மட்டுமே இருந்து எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது. மழைக் காலங்களில் இந்த வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து தூங்குபவர்கள் மீது விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர்.
போதிய வருவாய் இல்லாத காரணத்தால் இந்த வீடுகளை மேற்கூரைகளில் புதுப்பித்துக் கொள்ள முடியாத இருளர் இன மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, வீடுகளில் ஏற்பட்ட பழுதுகளை நீக்குதல் வேண்டும் என அரசு அதிகாரிகள், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
அதேபோல் தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் தங்களுக்குரிய பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுகின்ற பொழுது, வெற்றி பெற்றவுடன் உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருகிறோம் என்று கூறி வாக்குகளை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். இதுவரையில் இந்த மக்களை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக இருளப்பட்டி பீரங்கி நகர், இந்திரா நகர் காலனி உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது தண்ணீர் மழை நீர் கசிந்து கொட்டிக் கொண்டே இருப்பதால், கீழே படுக்க முடியாமலும், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் மேற்கூரை இருப்பதால், வீட்டில் இருக்கக் கூடிய நிலையிலும் மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே கசிந்து கொண்டிருக்கின்ற தண்ணீர் தரையில் விழாமல் பாத்திரங்களை வைத்து பிடித்து வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டில் இருக்கும் இருவர் உறங்கும்போது இருவர் விழித்து இருக்கின்ற சூழலில் இருந்து வருகிறது குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்டோரை வெளியில் தாழ்வாரத்தில் அருகில் உள்ள கோயில் கோயிலிலும் தங்கவைத்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டின் மேற்கூரையை புதுப்பித்து தர வேண்டுமென மனு அளித்து காத்திருக்கின்ற இந்த இருளர் இன மக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழக தமிழ்நாடு முதலமைச்சர் இருளர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தின் இழிநிலையை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். தங்களுடைய தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் எடுத்து, இந்த பழுதான வீடுகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என இருளர் சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion