மேலும் அறிய
Advertisement
தருமபுரி: 1,15,000 கன அடியாக நீர்வரத்து சரிவு; காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு
வினாடிக்கு 1,25,000 கன அடியிலிருந்து 1,15,000 கன அடியாக நீர் வரத்து சரிவு-காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு.
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,25,000 கன அடியிலிருந்து 1,15,000 கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 47,000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் மேலும் நீர்வரத்து உயர்ந்து வினாடிக்கு 1,35,000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மீண்டும் நேற்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைய தொடங்கி, வினாடிக்கு 1,25,000 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று மேலும் நீர்வரத்து குறைந்து, வினாடிக்கு 1,15,000 கன அடியாக சரிந்துள்ளது.
ஆனாலும் ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதை, மெயின் அருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 61-வது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வந்த உபரி நீர் வினாடிக்கு 41,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளா கர்நாடக மாநிலங்களுக்கு மேலும் 5 நாட்களுக்கு கர்நாடக
ன மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் கர்நாடக மாநிலத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி ஆற்றங்கரை ஓரமுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நீர்வரத்து நிலவரத்தை மத்திய நீர் வள ஆணைய அலுவலருக்கும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion