மேலும் அறிய
Advertisement
தருமபுரி: காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உறவினரை சிறுநீர் குடிக்க வைத்ததாக புகார்
’’எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் புகார்’’
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தில் முனிராஜ் என்பவரின் மகன் ரமேஷ் (19), டிப்ளமோ படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கதிரியப்பன் என்பவர் மகள் மோகனா (21), பி.காம் முடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வயது வேறுபாடு இன்றி காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ள ஊரை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். இதனால் மோகனாவின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என கூறி மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷை காதலித்து வந்த நிலையில், அவருடன் திருமணம் செய்து கொள்ள சென்றிருக்கலாம் என உறுதிப்படுத்தி கொண்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி மோகனாவின் உறவினர்கள் சிலர், ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரை அழைத்து சென்று, அவர்கள் கிராமத்திற்கு அருகே உள்ள எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு சென்றுள்ளனர். இதனை இருவரும் எங்கு இருக்கிறார்கள் கேட்டுள்ளனர். தொடர்ந்து பெண்ணை எங்கு வைத்துள்ளீர்கள் என்று கேட்டு, அவர்களை கடுமையாக அடித்து உதைத்ததுடன் மேலும் முகத்தில் சிறுநீர் கழித்தும், செருப்பால் அடித்து, சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மாந்தோப்பிலிருந்த மூவரில் ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி கிராமத்தின் பக்கம் ஓடி உள்ளார். இதனையடுத்து மாந்தோப்பில் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், அப்பகுதி மக்கள் வந்து மீட்டு காயமடைந்த இரண்டு பேரையும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம், ரமேஷூம், மோகனாவும் காதல் திருமணம் செய்து கொண்டதால், உறவினர்களை தாக்கியுள்ளனர்.
மேலும் உயர் சாதி பெண் என்பதால், எங்களை தாக்கி கடுமையாகத் சித்ரவதை செய்தனர். எனவே தாக்கியவர்கள் மீது எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion