மேலும் அறிய

தருமபுரியில் மதுபோதை அதிகமானதால் மனைவியை குத்தி கொன்ற கணவன்

’’மதுப்பழக்கம் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வருவது வழக்கமாக இருந்துள்ளது’’

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளர்கள் ஜெரினா கணவர் கலில். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியூாில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.  கலிலுக்கு மதுப்பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி தகராறு ஏற்படுவது, சமாதானம் ஆவது என்பது தொடர் கதையாகவே இருந்துள்ளது.

தருமபுரியில் மதுபோதை அதிகமானதால் மனைவியை குத்தி கொன்ற கணவன்
 
இந்நிலையில் நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்துள்ளனர். அப்பொழுது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு முழுவதும் பிரச்சினை தொடர்ந்து கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில்  கலில் நேற்றிரவு சுமார் 2 மணி அளவில் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து, ஆடைகளை பலவந்தமாக கழட்டி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஜெரினா மறுத்ததால்,  குடிபோதையில் இருந்த கலில் ஆத்திரத்தில், அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஜெரினா, அரை நிர்வாணமாக மேலாடை இல்லாமல், சத்தமிட்டவாறு, தப்பித்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளாா். ஆனால் உடலில் கத்தி ஆழமாக பதிந்ததால், வீட்டிற்கு வெளியே இரத்த வெள்ளத்தில், கீழே விழுந்தார்.

தருமபுரியில் மதுபோதை அதிகமானதால் மனைவியை குத்தி கொன்ற கணவன்
 
ஜெரினாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து பார்த்தனர். அப்பொழுது ஜெரினா உடலில் படுகாயத்துடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வந்ததை கண்ட, கலில் அங்கு இருந்து தப்பி ஒடியுள்ளாா்.   தொடர்ந்து ஒகேனக்கல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இந்த தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர், ஜெரினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த, ஒகேனக்கல் காவல் துறையினர், தப்பி ஓடிய கொலையாளி கலிலை, காவிரி ஆற்று பகுதியில் கைது செய்தனர். தொடர்ந்து கலிலிடம்,  ஒகேனக்கல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  ஒகேனக்கல் பகுதியில், குடிபோதையில் இருந்த  கணவனே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget