
Dharmapuri: பீரோவால் வந்த வினை... மின் கம்பியால் பலியான உயிர்கள்.. என்ன நடந்தது..?
தருமபுரி சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய பீரோவை 2வது மாடியிலிருந்து கீழே இறக்கும் போது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய பீரோவை 2 வது மாடியிலிருந்து கீழே இறக்கும் போது மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் 2 வது மாடியில் இலீயாஸ் பாஷா வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இலீயாஸ் தனது மனைவி சிராஜ் இருவரும் கடந்த 9ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்த தம்பதிகளின் 2 மகன்கள் வெளியூர்களில் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை இலீயாஸ் குடியிருந்த பச்சையப்பன் வீட்டியிலிருந்து கோல்டன் தெருவில் உள்ள மற்றோரு வீட்டிற்குற்கு குடியேற வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்துள்ளார். இதற்காக பொருட்களை ஏற்ற மினி லாரியை அழைத்து வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வந்து வண்டியில் ஏற்றியுள்ளார். இந்த பொருட்களை எடுத்து வைக்க, மினி லாரி ஓட்டுனர் கோபி மற்றும் குமார் என்பவரை வர வழைத்து வண்டியில் 2 வது மாடியிலிருந் கயிறு கட்டி இறக்கி உள்ளார். அப்பொழுது இலீயாசுக்கு உதவியாக ஓட்டுனர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், குமார் ஆகியோர் பீரோவை கயிறு கட்டி இறக்ககயுள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகில் மின்கம்பி வந்ததை, கவனிக்காமல், பீரோவை இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து பீரோவை இறக்கும் போது வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் பீரோ உரசியதில், மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி, சம்பவ இடத்லியே இலீயாஸ் மற்றும் ஓட்டுனர் கோபி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பச்சையப்பன் மற்றும் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பச்சையப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழாந்தார். மேலும் படுகாயமடைந்த குமாருக்கு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்ப துறையினர், காவல் துறையினர் வியந்த நடந்த இடத்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தருமபுரியில் வீடு காலி செய்யும் போது 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனையறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தருமபுரி நகரில் உள்ள வீடுகளுக்கு அருகில் மின்கம்பிகள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இது போன்ற மின்கம்பிகளை பாதுகாப்பாக பராமரிக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

