சேலத்தில் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி சி.ஐ.டி.யு போராட்டம்
1948ல் கொண்டு வந்த தொழிலாளர் நல சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் எட்டு மணி நேர வேலை சட்டத்தை பறிக்கும் வகையில் எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் விதமாக தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ள தமிழக அரசை கண்டித்து சிஐடியு மாவட்ட துனைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டத்தை திருத்தக் கூடாது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை பின்பற்றக் கூடாது. அனைவருக்கும் 8 மணி நேர வேலையை உத்தரவாதம் படுத்த வேண்டும். 12 மணி நேரமாக வேலையை உயர்த்த கூடாது. தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 1948ல் கொண்டு வந்த தொழிலாளர் நல சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிக்க கூடாது என வலியுறுத்தினர்.
இதேபோன்று, பஞ்சமி நில விற்பனை தொடர்பாக தடங்கல் மனு மீது அலட்சியப் போக்கில் ஈடுபட்ட சேலம் கிழக்கு இணை சாதி பதிவாளர்கள் அமுதா மற்றும் சண்முகசுந்தரம் மீது கடமையை புறக்கணித்தல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு இரண்டின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட பதிவு துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம் தாதகாப்பட்டி வருவாய் கிராமம் பட்டியல் இன மக்களுக்கு உரிமையான 16.5 ஏக்கர் நிலங்களை மீட்க கோரி ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தாதம்பட்டி கிராம பட்டியல் இன மக்களுக்கு பாத்தியப்பட்ட தோட்டி ஊழியம் அனாதினம் நிலங்களை விற்பனை செய்ய வீட்டு மனைகளாக பதிவாக்க நிலத்திரகர்கள் நில விற்பனையாளர்கள் பற்றி தகவல் அளித்து தடங்கல் மனுவை முறையாக முன்வைத்து அவ்வப்போது தொடர்ந்து சிபிஎம் கட்சியினர் நினைவூட்டி வந்தனர். அதனை மீறி மாவட்ட பதிவு துறை சேலம் கிழக்கு இணை சார் பதிவாளர்கள் அமுதா மற்றும் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் போலி ஆவணம் உருவாக்கத்தில் ஈடுபடும், நிலத் தரகர்கள் நில விற்பனையாளர்களுக்கு சாதகமாக 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்துள்ளனர். இது பட்டியல் இன மக்களுக்கு உரிமையான நில உடைமை சட்டத்திற்கு எதிரானது. எனவும், இச்செயலில் ஈடுபட்ட இணை சாய் பதிவாளர்களை வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு இரண்டின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அதன் பெயரில் போராட்டம நிறைவடைந்தது.