Cauvery: காவிரியில் 2.12 லட்சம் கன அடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பால், தமிழ்நாட்டு வரக்கூடிய காவிரியில் 2.12 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய காவிரியில் 2.12 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது
மேட்டூர் அணைக்கு நீர் வரட்து அதிகரிப்பு:
கர்நாடகா மற்றும் மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய காவிரி நீரின் அளவு 2.12 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து 1.60 லடசம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்ட்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை:
காவிரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
இன்றைய காலை நிலவரப்படி, கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 48.92 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 18,969 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 21,913 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், காவிரிக் ஆற்றின் கரையில் உள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Mettur Dam Flood Alert : அதிகரிக்கும் நீர்வரத்து..காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
View this post on Instagram