மேலும் அறிய

தருமபுரியில் வேளாண்மையில் ஈடுபடும் 64 மலை கிராம மக்கள் - அரசு வழிகாட்ட கோரிக்கை...!

’’மானிய விலையில் மிளகு, காபி செடிகள் மற்றும் இடு பொருட்களை வழங்க அரசு வேண்டும் கோரிக்கை’’

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலையில் சித்தேரி, பெரேரி புதூர், சூரியனகடை, சூளுக்குறிச்சி, மண்ணூர், தோல்தூக்கி உள்ளிட்ட அறுபத்தி நான்கு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் சாமை, தினை, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஊட்டி, கொடுக்கானல் போன்ற குளுமையான சூழல் இருப்பதால், சில்வர் ஓக் மரங்கள், மிளகு போன்ற பணப் பயிர்களையும் வைக்க தொடங்கியுள்ளனர். இங்கு விளைகின்ற சிறுதானியங்கள் முழுமையும் மலையிலிருந்து, அரூர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால்  மலை கிராமத்திற்கு சரியான சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால்,  சில வியாபாரிகள் மலை மீது சென்று தானியங்களை குறைந்த விலைக்கு மலைவாழ் மக்களிடம் வாங்கி செல்கின்றனர்.

தருமபுரியில் வேளாண்மையில் ஈடுபடும் 64 மலை கிராம மக்கள் - அரசு வழிகாட்ட கோரிக்கை...!
 
தற்போது சித்தேரி மலை கிராமம் முழுவதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சாமை விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்பொழுது சித்தேரி மலை மீதுள்ள மலை கிராமம் முழுவதும் சாமை  அறுவடை செய்யும் பணியில், மலை கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுவடை செய்கின்ற சாமையை பிரித்து ராசி எடுப்பதற்கு போதிய இடம் இல்லாமல் விவசாயிகள் வயலில் வெளியிலேயே தார்பாலின் அமைத்து அடித்து வருகின்றனர். எனவே மலை கிராமத்தில் விவசாயிகளுக்கு தானிய களம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தருமபுரியில் வேளாண்மையில் ஈடுபடும் 64 மலை கிராம மக்கள் - அரசு வழிகாட்ட கோரிக்கை...!
 
மேலும் மலை கிராமத்தில் விளைகின்ற விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் அரசு விலை நிர்ணயித்து, பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். சித்தேரி மலையில் உள்ள மலை கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், மலை விளைகின்ற ராகி, கம்பு, சோளம், திணை, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் சிறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும்  என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேப்போல் சித்தேரி மலை கிராமத்தில், உள்ள விவசாயிகளுக்கு மிளகு, காபி போன்ற பயிர்களை சாகுபடி செய்வது குறித்து வழிகாட்டு முறைகள் மற்றும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மலை கிராம விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மானிய விலையில் மிளகு, காபி செடிகள் மற்றும் இடு பொருட்களை வழங்க அரசு வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget