மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
தருமபுரி காவல் உட்கோட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.கஞ்சா கடத்தலை தடுக்க அதி நவீன கேமராக்கள் பொருத்த திட்டம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல் நடைபெறாமல் இருக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முக்கிய இடங்கள் இடங்களில், மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சாலைகள், முக்கிய வீதிகள், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 25 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 3,000 மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே குற்ற செயல்கள் குறைந்து காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
மேலும் ஒரு சில இடங்களில் நடைபெறும் திருட்டு வழிப்பறி, நகைப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தருமபுரி நகரில் பேருந்துகளில் 10-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் நகை பறித்ததாக மூன்று பெண்களை காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் தருமபுரி நகர பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், அரசு மருத்துவமனை, நகரின் முக்கிய சாலை சந்திப்புகள், முக்கிய தெருக்கள், திரையரங்குகள், வங்கி, நகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தருமபுரி நகரில் 750 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 512 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு குடியிருப்பு சங்கங்கள், கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நற்பணி மன்றம், காவல் துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொப்பூர், தருமபுரி, மதிகக்கோன்பாளையம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணிகளிலும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்றச் செயல்களை தடுக்க இந்த ஆறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தருமபுரி நகரில் மட்டும் 28 லட்சம் மதிப்பிலான 512 கேமராக்கள் பதிவு செய்ய பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வழிப்பறி, திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட 89 பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 45 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதில் தங்க நகைகளை இழந்தவர்களிடம், அவர்களுடைய நகைகளை திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கஞ்சா கடத்தலை தடுக்க அதிநவீன கேமராக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வெல்லோட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்களில் வாகனங்கள் அதிவேகமாக சென்றாலும் அதனுடைய நம்பர் பிளேட் தெளிவாக பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வாங்கப்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் நகரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion