YS Sharmila: தெலங்கானாவில் ஆட்சியை கலைக்க வேண்டும்.. ஆளுநர் தமிழிசையிடம் ஷர்மிளா கோரிக்கை
அரசியலமைப்பு அமலில் இருந்தால், தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் சந்திரசேகர ராவை, ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் தலைவர் ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, நேரில் சந்தித்து சந்திரசேகர ராவ் குறித்து புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஷர்மிளா பேசியதாவத. தெலங்கானாவில் நிலவும் உண்மை நிலையை எடுத்து கூறவே ஆளுநரை சந்தித்தேன்.
கே.சி.ஆர் அரசியலமைப்பு
தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். நாட்டில், இந்திய அரசியலமைப்பு அமலில் இருந்தால், தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் எதிர்க்கட்சிகள் தாக்கப்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதே சந்திரசேகர ராவின் நோக்கமாக உள்ளது.
Today, there are no leaders, ministers, CM & workers in BRS. Whole of BRS can be called 'BRS goons'. My concern today with Governor was that if violence on opposition continues,since this is the election year the violence is going to be even more frequent: YSRTP chief YS Sharmila pic.twitter.com/LVupcIkFwN
— ANI (@ANI) February 25, 2023
பி.ஆர்.எஸ் கட்சியில் குண்டர்கள் மட்டுமே உள்ளனர். தெலங்கானாவில், மாநில அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தெருநாய்கள் கடித்து குழந்தையின் உயிரை பறித்தாலும் கவலைப்படுவதில்லை. அனைத்து தரப்பு மக்களையும் சந்திரசேகர ராவ் ஏமாற்றியுள்ளார்.
கே.சி.ஆருக்கு எதிராக யார் பேசினாலும் பிரச்னை கொடுக்கிறார். அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 9 ஆண்டுகளில்ம், தெலங்கானா மக்களுக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்ன செய்தார். ஒய்.எஸ்.ஆர்.டி.பி-க்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ தேர்தல் சுமூகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை.
குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை:
அதனால்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைக்கிறோம். இதே விவகாரம் தொடர்பாக விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோருவோம்" என்றார்.
இதையடுத்து, மருத்துவ கல்லூரி மாணவி ராகிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்து விட்டு ஆறுதல் தெரிவித்துவிட்டு, இதுபோன்ற கொடுஞ் செயலகள் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது எனவும் குற்றச்சாட்டு வைத்தார்.