மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொள்கிறாரா ரஜினி? தமிழிசை பளீச்
"ஜனநாயகன் தம்பி விஜய்-க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கீதை வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்"

நடிகர் ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆன்மீகவாதி தான் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முருகன் மாநாட்டில் கலந்து கொள்கிறாரா ரஜினி?
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள் இனி தமிழ் மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற சூழ்நிலை உருவாக வேண்டும். இது முருகன் மாநாடு அல்ல. அரசியல் மாநாடு என எதை வைத்து கூறுகிறார்கள். அப்படி என்றால் இறை நம்பிக்கையே இல்லாத இவர்கள் ஏன் முருகன் மாநாடு நடத்தினார்கள்.
தமிழுக்காக வாழ்கிறோம் என்று கூறும் திமுக தலைவர்கள் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்களா? ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு படை வீட்டிற்கு சென்றிருக்கிறார்களா? அதேநேரத்தில் இந்து மத விழாக்களில் பங்கெடுத்திருக்கிறார்களா? ஏன் இந்த பாரபட்சம்?
புதிய கீதை வழியில் தீயசக்தியை எதிர்க்க வேண்டும்!
இரண்டாம் தர மனிதர்களாக அவர்களின் மனதில் இந்துக்களை நினைத்து இருக்கிறார்கள். மாநாடு நடத்துவது இந்து முன்னணி. ஆனால், நாங்கள் உடன் செல்வதற்கு காரணம் இந்த உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காக தான் செல்கிறோம். இதற்கு எதிராக செயல்படுபவர்கள் தோல்வி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து" என்றார்.
முருகன் மாநாட்டில் ரஜினி கலந்து கொள்வாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நடிகர் ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆன்மீகவாதி தான். ஆன்மீகவாதிகள் எல்லாம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இல்லை. கலந்து கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் அர்த்தம் இல்லை.
அண்ணன் துரைமுருகன் முருக பக்தரா? இல்லையா? முருகன் பக்தர் மாநாடு தான் இன்று நடைபெறுகிறது. நடிகர் பிறந்தநாள் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சகோதரியாக நான் அவரை வாழ்த்துகிறேன்.
விஜய்க்கு செம்ம வாழ்த்து சொன்ன தமிழிசை:
நாளைய தீர்ப்பில் ஆரம்பித்து, அழகிய தமிழ் மகனாக வலம் வந்து திருப்பாச்சியில் தங்கை பாசத்தையும் சிவகாசியில் தாயின் அன்பையும் பிரதிபலித்து துப்பாக்கி ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி வாரிசு அரசியலை எதிர்த்ததால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து சுறாவாக நீந்தி கில்லியாக வெற்றி கண்ட தமிழன்.
ஜன நாயகன் தம்பி விஜய்-க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கீதை வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்" என்றார்.





















