மேலும் அறிய

O Panneerselvam: அதிமுக அடையாளங்களை பயன்படுத்தமாட்டோம் - நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம்; ஏன் தெரியுமா?

O Panneerselvam: அதிமுகவினை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எடுக்கப்பட்ட  முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பழனிசாமி தரப்பு முறியடிக்க, கட்சி முழுவதும் பழனிசாமி கைவசம் வந்தது. 

தமிழ்நாட்டின் தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அரசியல் சலசலப்பு இன்று வரை முடிவுக்கு வந்தவண்ணம் இல்லை. அதிமுகவின் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அதே பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகாக்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார். அதன் பின்னர் அதிமுகவினை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எடுக்கப்பட்ட  முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பழனிசாமி தரப்பு முறியடிக்க, கட்சி முழுவதும் பழனிசாமி கைவசம் வந்தது. 

இதையடுத்து பன்னீர் செல்வம் தரப்பில் கட்சியில் இணைய வேண்டும் என சட்டப்போரட்டம் நடத்தத் தொடங்கினர். ஆனால் இது அனைத்தும் ஒவ்வொன்றாக பழனிசாமி தரப்பு எதிர்கொண்டது மட்டும் இல்லாமல் தற்போது பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகாக்கள் அதிமுக பெயர், கொடி, சின்னம், மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றியும் கண்டார்கள். அதன் பின்னர் பன்னீர் செல்வம் அதிமுக அடையாளங்களைத் துறந்து பொதுவெளியில் காணப்படுகின்றார். 

இந்நிலையிலும் பன்னீர் செல்வம் தரப்பு அதிமுகவில் இணைய சட்டப்போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் லெஃப்ட் கேண்டில் டீல் செய்யும் அளவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இன்னாள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு வளைந்து கொடுத்து போவதால் எடப்பாடியின் அரசியல் கட்சிக்குள் வெற்றிமுகமாக உள்ளது. இதனால் தான் பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டதால் தென் தமிழ்நாட்டில் வாக்குகளை இனி அதிமுக பெறுவது கஷ்டம் என பேசப்பட்டது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் மதுரையில் மாநாட்டினை தனது தலைமையில் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 

கட்சியின் அடையாளங்களை பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம்  இடைக்கால உத்தரவிட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்தார் பன்னீர் செல்வம். இந்த மேல்முறையீட்டு மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிபதி, பன்னீர் செல்வம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் நிலை என்ன என கேட்டார் நீதிபதி சதீஷ்குமார். 

பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ஹெச் அரவிந்த் பாண்டியன், “ மேல் முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என பதில் அளிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான விஜய நாராயணன், தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் எனவும், இந்த வழக்கை ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்திற்கு இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 

இதனை ஏற்றுக்கொண்ட பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், ” வழக்கின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம்” என உத்திரவாதம் அளித்தார். உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்  முறையாக பன்னீர் செல்வம் தரப்பில் தாங்களாகவே அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது அவரது சகாக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Story of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!Arvind Kejriwal Trails | தோல்வியை நோக்கி கெஜ்ரிவால் காலரை தூக்கும் பாஜக பழிவாங்கிய காங்கிரஸ்! | New DehliPregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக!  டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Embed widget