மேலும் அறிய

சசிகலா காலில் இபிஎஸ் ஏன் விழுந்தார் தெரியுமா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிமுகவினர் ஷாக்.!

சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது தவறில்லை என்று சசிகலாவை, திண்டுக்கல் சீனிவாசன் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏன்?, எதற்காக சொன்னார்?, அதன் தாக்கம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

சசிகலா காலில் விழுந்துதான் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பதிலானது, புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளது.

”காலில் விழுந்தது தவறு இல்லை”

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, “ எடப்பாடி பழனிசாமியை விட சீனியர்கள் பலர் இருக்கும் போது அவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி விட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அனைவரும் ஒன்றிணைந்துதான் , எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். துணை முதலமைச்சராக இருந்து கொண்டு உண்மைக்கு மாறாக உதயநிதி ஸ்டாலின் பேசக் கூடாது. 

சசிகலா காலில் இபிஎஸ் ஏன் விழுந்தார் தெரியுமா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிமுகவினர் ஷாக்.!

மேலும், காலில் விழுந்துதான் எடப்பாடி பழனிசாமி பதவி வாங்கியதாக உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.    
தனக்கு ஆதரவளித்த மூத்த நிர்வாகிகள் அனைவரின் காலிலும் எடப்பாடி பழனிசாமி விழுந்தார்.  சசிகலாவின் காலில் விழுந்ததில் என்ன தவறு இருக்கிறது. 
அவர் சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கியதாக உதயநிதி ஸ்டாலின்  கூறி வருகிறார். . பெரியவரின் காலில் விழுவது தப்பான விசயமே இல்லை.

திருமணம் நடக்கிறது, மணமக்கள் அனைவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம் . அதுபோன்றுதான், பதவி கொடுக்கும்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார். அப்போது, அனைத்து மூத்தவர்களின் காலிலும் எடப்பாடி பழனிசாமி விழுந்தார் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தீவிரமாகும் அதிமுக - திமுக மோதல் :

அதிமுக திமுக இடையேயான வார்த்தைப் போரானது முற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் வார்த்தை மோதலில் இறங்கும் அளவு  தீவிரமடைந்துள்ளது. 

திமுகவில் கூட்டணியில் உள்ள கட்சியினர் , கூட்டணியை விட்டு அதிமுகவில் வந்துவிடுவர் என்றும், சென்னை மழை பணிகளில் வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். மேலும் திமுகவின் ஆட்சி 18 அமாவாசைகள் என்றும் அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். 

சசிகலா காலில் இபிஎஸ் ஏன் விழுந்தார் தெரியுமா? திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிமுகவினர் ஷாக்.!

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில் “ திமுகவின் நல்லாட்சியை பார்த்து மக்கள் பாராட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதிமுகவினர் உள்ளனர். எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி , வலுவானது. எடப்பாடி பழனிசாமி , புதிதாக ஜோதிடம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
 
மேலும் , திமுகவினர் சிலர் தெரிவிக்கையில் “ முதலில் அதிமுகவை ஒழுங்குபடுத்துங்கள் என்றும் அதிமுகவை விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.

2026 தேர்தல் :

இந்த தருணத்தில் “ அதிமுகவிற்குள்ளே ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பை இணைத்து கட்சியை வலுப்படுத்தலாம் என்றும் குரல்கள எழுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இபிஎஸ் விடாப்படியாக , யாரையும் சேர்க்க விருப்பம் காட்டாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 
 
இந்த தருணத்தில் , சசிகலா காலில் விழுந்ததில் என்ன தவறு இருக்கிறது என் அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதை பார்க்கும் போது, இன்னும் சசிகலா மீது அதிமுகவினர்களுக்குள் மரியாதை இருப்பதாகவே பார்க்க முடிகிறது. ஆனால் , சசிகலாவை பெரியவர் -மூத்தவர் என புகழ்துள்ள கருத்தால் இபிஎஸ்-க்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்றும் பார்வை ஏற்படுகிறது.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget