மேலும் அறிய

TNCC President : ’உச்சகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேஸ்’ செல்வபெருந்தகை – சசிகாந்த் செந்தில் இடையே கடும் போட்டி..!

'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நியமனத்தில் சோனியா, ராகுல் தலையிடாமல் மல்லிகார்ஜூனா கார்கேவின் முடிவிற்கே சம்மதம் தெரிவித்துள்ளனர்’

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக யாரை தேசிய தலைமை நியமிக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை பிடிக்க மூத்த தலைவர்கள் முதல் இளம் தலைவர்கள் வரை முட்டி மோதிக்கொண்டிருக்கும் நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி
தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி

ஜோதிமணிக்கான வாய்ப்பு குறைவு

ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், சசிகாந்த் செந்தில், செல்வபெருந்தகை என முதலில் பட்டியல் நீண்ட நிலையில், ஜோதிமணிக்கே காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டது. ராகுல் காந்தியின் பாத யாத்திரியை ஒருங்கிணைக்கும் நபர்களில் ஜோதிமணிக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதனால், வருங்கால காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்று அவருக்கு பலரும் அப்போதே வாழ்த்து சொன்னார்கள். ஆனால், கர்நாடகா தேர்தல் வேலைகளில் காங்கிரஸ் கட்சி பிசி ஆனதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நியமனம் தள்ளிப்போனது.

ஜோதிமணி
ஜோதிமணி

செல்வபெருந்தகை Vs சசிகாந்த் செந்தில்

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் ஒதுக்கிட்டு செல்வபெருந்தகை மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமனம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே முடிவு எடுத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் சந்தித்து, அதில் குறிப்பிட்டதகுந்த வெற்றியையும் பெற்றிவிட்ட நிலையில், விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை அவரையே தலைவராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று அழகிரி ஆதரவாளர்கள் கார்கேவிடம் முறையிட்டுள்ளனர்.TNCC President :  ’உச்சகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேஸ்’ செல்வபெருந்தகை – சசிகாந்த் செந்தில் இடையே கடும் போட்டி..!

பட்டியல் இனத்தவர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்பும் கார்கே

ஆனால், மல்லிகார்ஜூன கார்கேவோ இப்போதே காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமித்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்றபோதிலும் சீனியர் முதல ஜூனியர் வரை பலரும் இந்த பதவியை பெற பல வழிகளில் முயற்சிப்பதால், யாரை தலைவராக நியமனம் செய்வது என்ற குழப்பத்தில் கார்கேவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும்போதே குறிப்பிட்டத்தக்க மாநிலங்களில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தலைவர் பதவிக்கு கொண்டுவந்துவிட வேண்டும், அவர்களை அதிகாரமிக்க பொறுப்புகளுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என கார்க்கே நினைப்பதால், தமிழ்நாட்டில் செல்வபெருந்தகை மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகிய இருவரில் ஒருவரே அடுத்த காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்படா அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.TNCC President :  ’உச்சகட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேஸ்’ செல்வபெருந்தகை – சசிகாந்த் செந்தில் இடையே கடும் போட்டி..!

கார்கேவின் சாய்ஸ் ‘செல்வபெருந்தகை’

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நியமனத்தில் சோனியா, ராகுல்காந்தி பெரிதாக தலையிடாமல் மல்லிகார்ஜூனா கார்கேவே முடிவு செய்துக்கொள்ளட்டும் என ஒதுங்கி இருப்பதால், அவரின் சாய்ச்சாக உள்ள செல்வபெருந்தகையே அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இருப்பினும், கடைசி வரை தலைவர் பதவி கேட்டு மோதி பார்த்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜோதிமணி, கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோரும் உள்ளனர். இந்த இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, செல்வபெருந்தகையை எப்படி காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே நியமிக்கப்போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கார்கேவுடன் ஜோதிமணி, செல்வபெருந்தகை
கார்கேவுடன் ஜோதிமணி, செல்வபெருந்தகை

விரைவில் சந்தேகங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட  இருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget