CV Shanmugam: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கொடி பறக்கும் - எம்பி சி.வி. சண்முகம்
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கொடி என்றும் பறந்து கொண்டே இருக்கும் - சிவி சண்முகம் (மாநிலங்களவை உறுப்பினர்)

விழுப்புரம்: விழுப்புரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மேடை பேச்சு :-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பதவி ஆசைக்காகவும், பணத்தாசைக்காவும் அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்து சில துரோகிகள் இரட்டை இலை சின்னத்தை முடக்கினர். இயக்கத்தினை முடக்கி விடலாம் என பகல் கனவு கான்கின்ற திமுக போன்ற சில கட்சிகள் என கனவு கண்டாலும் ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவை எதுவும் செய்ய முடியாது ஒரே ஒரு அமலாக்கதுறை, ஒரே ஒரு வருமானத்துறை அதிகாரிகள் வந்ததால் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தடுமாறி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அடி மட்ட தொண்டனும் தமிழகத்தின் முதலமைச்சராக வர முடியும் என்ற சாதனையை படைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. திமுக போல இது குடும்ப ஆட்சி இயக்கம் அல்ல அதிமுக அடிமைகள் வாழுவதே திமுக இயக்கத்தில் தான் என தெரிவித்தார். தமிழகத்திலுள்ள மக்கள் அனைவரும் ஏன் திமுகவிற்கு வாக்களித்தோம் என்ற மனநிலையில் உள்ளனர். தமிழகத்திலேயே மகிழ்ச்சியோடு இருக்கிற குடும்பம் ஸ்டாலின் குடும்பதான் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் வந்த அடுத்த நான்கு மாதங்களிலையே சட்டமன்ற தேர்தல் வரக்கூடும் என கூறினார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கொடி என்றும் பறந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

