மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை எங்கு சென்றார் என்பது தெரியவில்லை தாமரை மலர்ந்தே தீறும் என்று கூறியவர்களும் காணவில்லை என கூறினார் - திருமாவளவன்
விழுப்புரம் : தேர்தல் முடிவிற்கு பிறகு மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை எங்கு சென்றார் என்பது தெரியவில்லை தாமரை மலர்ந்தே தீறும் என்று கூறியவர்களும் காணவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் அரிசி அரவை ஆலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபானி,சிவி கனேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி எம் பி ஜெகத் ரட்சகன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், துனை சபாநாயக பிச்சாண்டி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் அறிமுக கூட்ட மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ஜீலை 10 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டும் வல்லமை மிகுந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளதாகவும்,
தொடர்ந்து திமுக கூட்டணி தொடர்ச்சியான வெற்றி பெற்று வருகிறது இந்த வெற்றியை எந்த கட்சியாலும் சாதிக்க முடியவில்லை. ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்று சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இந்தியா கூட்டணி மீதும் ஸ்டாலின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், காலை சிற்றுண்டி திட்டம் வரலாறு கூறும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளதாகவும், மக்கள் நலன்களில் அக்கறை காட்டுகிற திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாகவும் பாஜகவில் தமிழகத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.
"தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை"
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை எங்கு சென்றார் என்பது தெரியவில்லை தாமரை மலர்ந்தே தீறும் என்று கூறியவர்களும் காணவில்லை என கூறினார். இடைத்தேர்தல் வெற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்றும் பிற்போக்கு சக்திகளால் சமூக நல்லிணக்கத்திற்கு அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து இருப்பதால் முன் உனர்ந்து ராகுல் காந்தியை சந்தித்து இந்தியா கூட்டணி உருவாக காரணமாக ஸ்டாலின் இருந்ததாகவும், இந்தியா கூட்டணி வலிமை பெற வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளதாகவும், இடைத்தேர்தலில் வெற்றியை ஸ்டாலினுக்கு தர வேண்டுமென்றும் இடைத்தேர்தல் வெற்றி 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.