ADMK alliance: எத்தனை தொகுதிகளில் இரட்டை இலை போட்டி.? வேட்பாளர் பட்டியல் எப்போது.? எடப்பாடி போட்ட செம பிளான்
ADMK alliance: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முதல் ஆளாக தயாராகி வரும் அதிமுக, வேட்பாளரை பட்டியலை இறுதி செய்துள்ளது. அந்த வகையில் தை மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க அதிமுக திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக மீண்டும் கூட்டணியை ஏற்படுத்தியது. அடுத்தாக அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது. தேமுதிகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் முதல் ஆளாக இருக்கும் அதிமுக, முதல் கட்ட தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதி.?
அடுத்தாக வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி முடித்து வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்துள்ளது. மேலும் கூட்டணிகளுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையும் ஓரளவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில், பாஜகவிற்கு 23 தொகுதியும், பாமகவிற்கு 15 தொகுதியும், அமமுகவிற்கு 7 முதல் 9 தொகுதியும், தமாகாவிற்கு 5 தொகுதியும், ஜஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 173 முதல் 175 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை களம் இறங்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தை மாதம் இறுதிக்குள் அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிக்கப்பட்டு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பணிகளை அதிமுக தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவை வீழ்த்த வியூகம், யார் யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு, தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து செய்யும் வகையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை மக்களை சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















