மேலும் அறிய

Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??

Vijaya Baskar : அதிமுக தலைமை மீது அதிருப்தி காரணமாக எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய விஜயபாஸ்கர், இன்னும் தவெகவில் இணையாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. தவெகவில் இணைக்க விஜய் மறுத்துவிட்டாரா? என விவாதம் தொடங்கியுள்ளது.

தவெக வெற்றி - 3வது இடத்தில் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கட்சியை தொடங்கிய விஜய், ஆட்சியை பிடித்து நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார். அதே நேரம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என திட்டமிட்டிருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட தொடங்கினார்கள்.

அதிமுக 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 25 எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் தலைமையில் செயல்பட தொடங்கினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி 25 எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறித்ததும் இல்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தார். இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் தலை தூக்கியது. இதில் மரகதம் குமரவேல் - மதுராந்தகம், எஸ். ஜெயக்குமார் - பெருந்துறை,
பி. சத்தியபாமா - தாராபுரம், இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் என அடுத்தடுத்து தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். ஆனால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மட்டும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு உள்ளார். இதுவரை வேறு கட்சியில் இணையவில்லை.

விஜயபாஸ்கர் திட்டம் என்ன.?

இது தொடர்பாக புதுக்கோட்டை பகுதியில் விசாரிக்கையில், சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். ஆனால் கட்சியை விட்டு செல்ல மனமில்லாமல் தவித்துள்ளார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தவெகவிற்கு பதிலாக திமுகவில் இணையவே விஜயபாஸ்கர் முயற்சி செய்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளான ரகுபதி, மெய்யநாதன், செல்லபாண்டி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திமுகவில் விஜயபாஸ்கர் இணையமுடியாத நிலை ஏற்பட்டது.

விஜயபாஸ்கரை கைவிட்டாரா விஜய்.?

அடுத்ததாக தவெகவில் இணைய திட்டமிட்டார். ஆனால் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் தான் இணைவேன் என விஜயபாஸ்கர் உறுதியாக சொல்லியுள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களாக மாற்று கட்சியினர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையிலேயே இணைந்து வருகிறார்கள். எனவே விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியானது இன்னும் நடைபெறாமல் உள்ளது. தற்போது அதிமுகவிலும் இல்லாமல், தவெகவிலும் இல்லாமல் விஜயபாஸ்கர் நட்டாற்றில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்த போதும் இன்னும் ஓரிரு நாட்களில் தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்து விடுவார். விரைவில் அறிவிக்கப்படவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விஜயபாஸ்கர் அமைச்சராவார் என அவரது அதரவாளர்கள் நம்பிக்கையோடு தெரிவித்து வருகிறார்கள். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?" - முதல்வரை சாடிய கனிமொழி!
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
IND vs NZ: தலைவலி தரும் நியூசிலாந்து.. புது தடம் பதிக்குமா கில் படை? இந்திய ரசிகர்கள் ஆர்வம்
நவ.23-இல் திருச்சி செல்லும் முதலமைச்சர்? - இடைத்தேர்தல்களை குறிவைத்து காய்நகர்த்தும் முதல்வர்!

Embed widget