Congress: மொத்தமாக வாஷ் அவுட் ஆன காங்கிரஸ்.! 1557 இடங்களில் இவ்வளவு குறைவான எம்எல்ஏக்களா.?அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவையே தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் நிலை, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அந்தவ கையில் வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பெரும் அளவிற்கு சரிந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் வளர்ச்சியும்
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திர வரலாற்றிலும், சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் வடிவமைப்பிலும் முக்கியமான பங்கை கொண்ட கட்சியாகும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1947 முதல் 1977 வரை பெரும்பாலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தது. இதில் ஜவஹர்லால் நேரு நீண்ட காலம் பிரதமராக இருந்து நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்தவராவர். குறிப்பாக பொருளாதாரத் திட்டமிடல், அறிவியல் வளர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவை முக்கிய அம்சமாகும்.
இதனையடுத்து இந்திரா காந்தியின் வலுவான தலைமையால் காங்கிரஸ் இன்னும் அதிகமான மக்கள் ஆதரவை பெற்றது. 1971 போரில் இந்தியாவின் வெற்றியும் காங்கிரசின் புகழை உயர்த்தியது. இதனையடுத்து இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தால் காங்கிரசுக்கு எதிரான மக்கள் மனநிலை உருவானது. 1977 தேர்தலில் முதன்முறையாக காங்கிரஸ் மாபெரும் தோல்வியை சந்தித்தது. 1980-களிலும் 1990-களிலும் காங்கிரசிலிருந்து பல பிரிவுகள் பிரிந்து தனித்த கட்சிகளை தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடிவிற்கு வந்தது. 2004ஆம் ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தொடர்ந்து 10ஆண்டுகள் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி புரிந்தது.
தூக்கியடிக்கப்பட்ட காங்கிரஸ்
இதனையடுத்து 2014ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் அலையில் சிக்கி காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்பட்டது. எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்தது. அடுத்தடுத்த தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு குறைந்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பல நிர்வாகிகள் பாஜகவிற்கு பல்டி அடித்தனர். இதனால் மாநிலங்களில் செல்வாக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டையே பல ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி மேல் தோல்வியே பரிசாக கிடைத்தது.
தற்போது கர்நாடகா, தெலங்கானா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. அதே நேரம் பாஜக நாடு முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முக்கிய வட மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களில் ரொம்ப ரொம்ப குறைவான எம்எல்ஏக்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை
அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் உள்ள மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வெறும் 02 மட்டுமே உள்ளது. பிஹார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை-06, மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரு எம்எல்ஏக்கள் கூட இல்லை.
மஹாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை-16, ஒடிஷாவில் மொத்த உள்ள 147 தொகுதிகளில் காங்கிரஸ்- 14 இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. குஜராத்தில் 182 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 12 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ளது.
எனவே வட இந்திய மாநிலங்களில் மொத்தமாக உள்ள 1557 இடங்களில் காங்கிரஸ் ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 50 மட்டுமே உள்ளது.




















