மேலும் அறிய
Advertisement
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
கட்சியை அழித்து விடுவாய் இரட்டை இலையை முடித்து விடுவாய் அண்ணா திமுக கட்சியை அழித்து சின்னாபனம் ஆக்கி விடுவாய் அதனால் தான் உன்னுடன் இருந்தேன்
விழுப்புரம் : கட்சி, ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என அரகண்டநல்லூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு பரபரப்பு பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 114ஆது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதாவுடன் ஏன் கூட்டணி வர வைத்தது என்றால், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த காலத்திலும் உறவு வைக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் அன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது கட்சியை துரோகிகள் இரண்டாகப் பிரிந்தார்கள். ஒருவர் மோடியிடம் சென்று நீங்கள் அண்ணா திமுகவின் ஆட்சியை கலைக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரில் இருந்து நீக்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் அதற்கு நான் உங்களுக்கு துணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஓ பன்னீர்செல்வம் என்கின்ற துரோகி அன்று மோடியிடம் சென்ற காரணத்தினால், அப்போது மத்தியில் இருந்த அரசாங்கம் இங்கு ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்கள். நான் உங்களுக்கு துணையாக நிற்கிறேன் என்று சொல்லி மத்திய அரசு தனியாக இருந்த காரணத்தினால் அன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தை கூப்பிட்டு கட்சியில் இணைய கூறிய போது, அவர் நான் கட்சியில் சேருகிறேன் மோடி சொன்னால்தான் சேர்வேன் என கூறினார்.
கட்சியில் இணைவதற்கு மோடி ஆதரவோடு சேர்ந்து துணை முதல்வராகி, அப்போது சசிகலாவின் தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இறப்பில் மர்மம் இருக்கிறது அவர் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் கூறினார். இதற்கு தமிழக அரசாங்கம் தனி ஆணையம் அமைக்க வேண்டும், அந்த ஆணையம் அமைத்தால் அம்மாவின் இறப்பு தெரிந்து விடும்.
கட்சி, இரட்டை இலை, எம்ஜிஆர் மாளிகையை காப்பாற்ற வேண்டும் என பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு சட்ட போராட்டம் நடத்தி இரட்டை இலை, கட்சியைப் பெற்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்று வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவுடன் என் வேலை முடிந்து விட்டது.
எந்த காரணத்துக்காக உன்னோடு இருந்தேன் கட்சியை அழித்து விடுவாய் இரட்டை இலையை முடித்து விடுவாய் அண்ணா திமுக கட்சியை அழித்து சின்னாபனம் ஆக்கி விடுவாய் அதனால் தான் உன்னுடன் இருந்தேன். இதன் பிறகு அதற்கு வேலை இல்லை ஒட்டுமில்லை உறவில்லை வேற துணிச்சலாக முடிவெடுத்து வெளியே வந்தவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாரோ நாங்க யாரோ என்று போனோம் ஆனால் எங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் மிரட்டல்கள் வந்தது எதுவும் பொறுப்பெடுத்தாமல் கடந்து சென்றோம். ஆனால் இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு என தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
திரை விமர்சனம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion