மேலும் அறிய

Viral video: பாஜக பேரம் பேசியதாக வீடியோவை வெளியிட்ட சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

தெலங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதியின் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 இல் தெலங்கானாவில் ஆட்சி அமைத்ததில் இருந்தே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக முதல்வர் சந்திரசேகர் ராவின் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்...அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு..!

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ள சந்திரசேகர ராவ், கட்சியின் பெயரையும் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார்.  மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சந்திரசேகர ராவ். பிரதமர் மோடியையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சந்திரேசகர் ராவ்.

இந்நிலையில், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும் இதற்கான பேரத்தை நடத்திய 3 பேரை கைது செய்து இந்த குதிரை பேரத்தை முறியடித்து இருப்பதாக தெலங்கானா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

தெலங்கானாவில் ஆளும் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் தலா ரூ. 50 கோடி பணம், அரசு காண்ட்ராக்ட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கட்சி மாற வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஒருவர் பேரத்தில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தெலங்கானா பாஜக தலைவர்கள், முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற குதிரை பேர நாடகங்களை சந்திரசேகர் ராவ் நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனிடையே, தெலங்கானா மாநிலத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

அதேபோல, பீகார் மாநிலத்தில் உள்ள மோகமா மற்றும் கோபல்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், மகாராஷ்ட்ராவில் உள்ள அந்தேரி கிழக்கு தொகுதிக்கும் ஹரியானா மாநிலத்தில் உள்ள அதம்பூர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகரண்ணாத் தொகுதியிலும், ஒடிசா மாநிலத்தின் தாம்நகரிலும் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இந்த இடைத்தேர்தலில் துணை ராணுவப் படையினரும், அந்தந்த மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முனுகோடு தொகுதியில் 105 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Embed widget