பொது அமைதியை குலைக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக வினோஜ் பி செல்வம் மீது வழக்குப்பதிவு
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர், விஜோஜ் பி செல்வம் வதந்தியை பரப்பி, மக்களிடத்தில் பகைமையை உருவாக்க நினைப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார்.
ஜனவரி 26-ம் தேதி, நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.
அதில், ”விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி. சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது! உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு!” என பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் சர்ச்சையான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர், விஜோஜ் பி செல்வம் வதந்தியை பரப்பி, மக்களிடத்தில் வெறுப்பையும், பகைமையும் உருவாக்க நினைப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார்.
விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி.
— Vinoj P Selvam (@VinojBJP) January 27, 2022
சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது!
உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு! pic.twitter.com/vl3KsM1H2h
இது குறித்து சென்னை காவல் ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில், "சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்வவர் சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், வினோஜ் P.செல்வம் என்பவர் தன்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்த பொது பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி அமைதியை குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். மேற்கண்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கானது புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்