Villupuram: தொடர் சர்ச்சையில் பாஜக மாவட்ட தலைவர்; விழுப்புரத்தில் தொண்டர்கள் தர்ணா போராட்டம்
விழுப்புரம் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்ககோரி பாஜகவினர் தர்ணா போராட்டம்.
விழுப்புரம்: விழுப்புரம் பாஜக தெற்கு மாவட்ட தலைவரும் சர்ச்சை நாயகனுமான விஏடி கலிவரதனை மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஏடி கலிவரதன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்தாண்டு பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி அடிக்கடி சர்ச்சையில் மாட்டி வருகிறார். இதனால் கடந்த ஆண்டு மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே விழுப்புரம் மாவட்டம் பாஜகவை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு மீண்டும் வி ஏடி கலிவரதன் தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார்.
விஏடி கலிவரதன் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகளுக்குள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் சலசலப்பு இருந்து வந்த நிலையில் மீண்டும் வி ஏ டி கலிவரதன் மாவட்ட ஐ டி விங் பிரிவு தலைவருடன் பேசும்போது, பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒன்னுமே தெரியாது என்றும் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பரப்பரப்பினை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பாஜக கட்சி நிர்வாகிகள் சென்னை தலைமையிடத்திற்கு புகார்கள் தெரிவித்து தகாத வார்த்தைகளால் பேசுவதையும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதை கண்டித்தும் விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலையிலுள்ள பாஜக அலுவலக வளாகத்தினுள் பாஜகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சியில் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்களுக்கு தகுந்த மரியாதையும் இல்லாமல் சாதி ரீதியான பாகுபாட்டினை கலிவரதன் பார்ப்பதாக புகார்கள் தெரிவித்தால் நடவடிக்கையை கட்சி தலைமையிடம் எடுபதில்லை என வேதனை தெரிவித்தனர். ஒரு பக்கம் கட்சி நிர்வாகிகள் தர்ணா போரட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது எந்த வித சலனமும் இல்லாமல், தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்