மேலும் அறிய

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து போராடியது பாஜக மட்டுமே - வானதி சீனிவாசன்

”வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் நாடகங்கள் இனி ஒருபோதும் எடுபடாது”

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ”வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தை பாஜக சிதைக்கப் பார்க்கிறது.  அரசியல் லாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. சமூக நல்லிணக்க மண்ணான தமிழ்நாட்டில், மதவெறி அரசியல் எனும் நெருப்பு மூட்டிக் குளிர்காய நினைக்கும் பாஜகவுக்கு எதிரான மனநிலையே எப்போதும் உள்ளது என்று கூறியுள்ளார். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சமூக நல்லிணக்க மண்தான். இது திமுக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எப்போதும் இது 'பெரியார் மண்' என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நேரம் என்பதால் சமூக நல்லிணக்க மண் என்று கூறியிருக்கிறார். அதற்காக நன்றி!

இந்து மத வெறுப்பு

தேர்தலுக்கு முன்பு தங்களது உயிர் மூச்சு  கொள்கையாக, நாத்திகம், இந்து மத வெறுப்பை முன்வைக்கும் திமுக, தேர்தல் வந்து விட்டால் அவற்றை மறந்தும் கூட பேச மாட்டார்கள். தேர்தலுக்கு முன்பு எந்த தலைவரைப் பற்றி மூச்சுக்கு மூச்சு பேசினார்களே, அந்த தலைவரின் பெயரைக்கூட தேர்தல் காலத்தில் உச்சரிக்க மாட்டார்கள். திமுகவின் 'சமூக நல்லிணக்கம்', 'மதச்சார்பின்மை' என்பது இந்து மத வெறுப்பு மட்டுமே. அதனால்தான், இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூட அவர்களுக்கு மனம் வருவதில்லை. சென்னையில் போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்களை அழைத்துக் கொண்டு   இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிறிஸ்தவ மத தலைவரான மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி அவர்களை சந்தித்திருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆர்ச் பிஷப்பை சந்தித்ததாக சேகர்பாபு தனது சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அமைச்சரும், திமுக வேட்பாளர்களும் கிறிஸ்துவ மத தலைவரை சந்தித்ததை நான் வரவேற்கிறேன். இது நல்ல ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், தமிழ்நாடு சமூக நல்லிணக்க மண் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மதத் தலைவர் யாரையாவது சந்திக்குமாறு தனது வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாரா? மற்ற மத தலைவர்களை நேரில் சென்று சந்திக்கும் திமுகவினர், திமுகவுக்கு ஆதரவளிக்கும் இந்து மத தலைவர்களைக் கூட தங்கள் இடத்திற்கு அல்லது பொது இடத்திற்கு வரவழைத்துதான் சந்திக்கிறார்கள். திமுகவின் மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் என்பது இதுதான். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்று கூறி சிறுபான்மையினரை அச்சமூட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வரும் திமுகவுக்கு சமூக நல்லிணக்கம் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. பெரும்பான்மையுடன், சிறுபான்மையை மோத விட்டு அந்த நெருப்பில் குளிர் காய நினைக்கும் திமுகவுக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கச்சத்தீவு விவகாரம்

தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத பாஜக அரசு, தன் குற்றத்தை மறைக்க, கச்சத்தீவு விவகாரத்தைக் கிளறிப் பார்க்கிறது. கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது. அப்போது பாஜக என்று ஒரு கட்சியே கிடையாது என்றும் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பேட்டியில் ஸ்டாலின் கூறியிருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது என்பது இதுதான். 2004 முதல் 2014 வரை மத்தியில் திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொள்ளப்படுவதும் வாரந்திர நிகழ்வாக இருந்தன. தமிழக மீனவர்கள் பல மாதங்கள், ஏன் ஆண்டுக்கணக்கில் கூட இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின் போது தான், இலங்கையில் தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அவர்களை தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து மீட்டுக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.  கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். இவற்றையெல்லாம் தமிழக மீனவர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள். 1974 -ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜித்தவர் அன்றைய ஜனசங்கம் கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய். கச்சத்தீவை தாரைவார்க்க அன்றைய திமுக அரசு ஒப்புதல் அளித்ததற்கான ஆவணங்கள் வெளிச்சத்திற்கு வந்து விட்டன. இனியும், சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது. கச்சத்தீவு இலங்கைக்கு தாய்வார்க்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர். ஜனசங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி. பின்னாளில் மத்திய அமைச்சராகவும், பாஜக தேசியத் தலைவராகவும் இருந்தவர். இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் நாடகங்கள் இனி ஒருபோதும் எடுபடாது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget