மேலும் அறிய

Vaiko Assets : ‘வைகோ-விடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து’ துரை வைகோவின் ஆசையா இதுதானா..?

தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரை வைகோவுக்கு வந்து விட்டது என நாஞ்சில் சம்பத் தெரிவித்த்துள்ளார்.

சென்னை: வைகோவிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரை வைகோவுக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கிவிட்டார்கள் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் ஆசை வந்துவிட்டது!

மதிமுகவில் தற்போது கருத்துமோதல்கள் மற்றும் சலசலப்பு நிகழ்ந்து வருகிறது. வைகோவிற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த மல்லைசத்யா மீது வைகோவே அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியதை தொடர்ந்து, மல்லை சத்யா மதிமுகவில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்.

வைகோவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லை சத்யா வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார் எனக் கூறினார்.

மல்லை சத்யா திமுகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வைகோ பற்றியும், துரை வைகோ பற்றியும் பொது வெளியில் பேசி வருகிறார் மல்லை சத்யா. அதேசமயம், மதிமுகவில் மல்லை சத்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் மதிமுக நிர்வாகி நாஞ்சில் சம்பத் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில்., 

நாஞ்சில் சம்பத் பேசுகையில், வைகோ, துரை தவிர, மதிமுகவில் உள்ள அனைவரும், என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் தவிர முக்கியமான இடங்களில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் மதிமுக குறித்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவிடம் மதிமுக விலைபோய் விட்டது. துரை வைகோவுக்கு அதிகார பசி ஆட்டி படைக்கிறது. துரைக்கும், மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், புத்திரனை வைத்துக் கொண்டு, மொத்த கட்சியையும் குடும்பக் கட்சியாக்கி இருக்கிறார் வைகோ.

கடந்த லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட, கட்சிக்காக காலம் காலமாக உழைத்த, பலரும் காத்திருந்தனர். தங்களில் ஒருவருக்கு அந்த தொகுதியை வைகோ ஒதுக்குவார் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். ஆனால், வைகோ தொகுதியை தன் மகன் துரைக்கு கொடுத்தார்.

நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது

கட்சிக்கு உழைத்தவர்களை விட, மகன் தான் முக்கியம் என முடிவெடுத்து, தொகுதியை ஒதுக்கினார். விளைவு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, மதிமுக தேய்ந்து விட்டது. வைகோவின் சுயநல செயல்பாடுகளால், மதிமுகவை விட்டு எல்லோரும் வெளியேறி வருகின்றனர். 'நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது' என கட்சியினர் முடிவெடுத்து விட்டனர்.

மதிமுக அஸ்தமனமாகி விட்டது

தற்போது மதிமுகவில் இருப்பவர்களை மொத்தமாக இரண்டு மினி பஸ்களில் ஏற்றி விடலாம். மதிமுக அஸ்தமனமாகி விட்டது. அக்கட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது. வைகோ தன் மகனுக்காக, கட்சியையே தாரைவார்த்து விட்டார். திருச்சியில் வெற்றி பெற்ற ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை ஆகியோர் மத்திய அமைச்சராகினர். அந்த சென்டிமென்ட்படி, தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரைக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கி விட்டனர்.

கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும்!

மதிமுகவை இனி மீட்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மதிமுகவுக்கு 12 சீட், ஒரு மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி கேட்டு கூட்டணி பேசி முடித்து விட்டனர். ஹிட்லர், சுவஸ்திக் பட்டையை தன் கையில் கட்டியிருப்பார். துரையும் ஒரு ஹிட்லர் தான். அவரும், கட்சிக் கொடியை கைப்பட்டையாக கட்டியுள்ளார். கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும். ஆனால், துரை சட்டையில் கட்டியுள்ளார்.

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். பூமிநாதன் எம்.எல்.ஏ விரைவில் திமுகவிற்கு சென்று விடுவார். மதிமுகவுக்கு வைகோ முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். வைகோவின் தவறான செயல்பாடுகளால், மிச்ச சொச்சமிருக்கும் மதிமுகவினர் அனைவரும் திமுகவை நோக்கிச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget