Amit Shah on Ambedkar: ” நான் அப்படி பேசவில்லை” அம்பேத்கருக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை - அமித்ஷா விளக்கம்.!
Amit Shah on Ambedkar: அம்பேத்கர் குறித்து, நான் பேசிய ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் என மத்திய அமித்சா தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியது சர்ச்சையான நிலையில் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய தினம், மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா அம்பேர்தகர் குறித்து பேசியது சர்ச்சையானது. அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் கண்டனம் எழுந்தது
இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார்.
அமித்சா தெரிவித்ததாவது, “ எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை.
நேற்று முதல் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம் , அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah says, "......Since yesterday, Congress has been presenting the facts in a distorted way and I condemn it... Congress is anti-BR Ambedkar, it is against reservation and the Constitution. Congress also insulted Veer Savarkar. By… pic.twitter.com/V2QYjPz11V
— ANI (@ANI) December 18, 2024
காங்கிரஸ் கட்சியைவிட, பாஜக கட்சிதான் அம்பேத்கர் சட்டங்களை அமல்படுத்துகிறது.அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேருவும் , இந்திரா காதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்”
காங்கிரஸ் தலைவர் கார்கேஜி, என்னை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கிறார்; அது அவருக்கு மகிழ்ச்சி அளித்திருந்தால், நான் ராஜினாமா செய்திருப்பேன், ஆனால் அது அவரது பிரச்சனையை தீர்க்காது, ஏனெனில் அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதே இடத்தில், அதாவது எதிர்க்கட்சியில் வரிசையில்தால் இருக்க வேண்டும்.
#WATCH | Delhi: On opposition's protest against him, Union Home Minister Amit Shah says, "...I would have been happy if they had challenged the facts presented in my speech. Every word of my speech is factual and taken from history. That is why they are making such efforts by… pic.twitter.com/86iQttJb8U
— ANI (@ANI) December 18, 2024
மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.