”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்ஷன் இதுதான்..
Udayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில், அந்த அறிவிப்பு எப்போது வரும்? என கேட்கப்பட்டது
Udayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில், அந்த அறிவிப்பு எப்போது வரும் என்றும் அதனைக் கொண்டாட பட்டாசுகள், இனிப்புகளுடன் மிகுந்த எதிர்பார்ப்பில் அறிவாலயத்தில் திமுகவினர் குவிந்தனர்
காலை முதலே, துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் , துணை முதல்வர் அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியானது என கேள்வி கேட்டனர்.
அதற்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றுவிட்டேன், அறிவாலயம் போகவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து, முதலமைச்சர் முடிவு எடுப்பார். அது, அவரது தனிப்பட்ட முடிவு, அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், பெரியாருக்கு விஜய் மரியாதை அளித்தது குறித்து கேள்விக்கு, தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி கொடுப்பது பற்றி பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இதற்கான கோப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளதாகவும் எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரவு மட்டுமே இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளிக்கையில், முதலமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது#UdhayanidhiStalin #DMK #MKStalin #tamilnadu #tamilnews pic.twitter.com/TRxiAWp3KB
— ABP Nadu (@abpnadu) September 18, 2024
இந்த தருணத்தில் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
Also Read: Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?