மேலும் அறிய
TVK Madurai: விஜய் தலைமையில் மதுரையில் பொதுக்கூட்டம் - வந்தது புதிய அப்பேட்
மற்ற கட்சிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது ஊர்வலம் செல்லும் பொழுது காவல்துறையினர் தடுப்பதில்லை. ஆனால் வளரும் கட்சிகள் எங்களைப் போன்ற நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள் என குற்றச்சாட்டு.

மதுரை தவெக மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு
Source : whats app
TVK Vijay Madurai Meeting: விரைவில் மதுரையில் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தவெக மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி தகவல் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் அறிவிப்பு
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் மூன்று கட்டங்களாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்து முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை அறிவித்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்திருக்கிறார். இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மாவட்ட செயலாளராக மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த SR.தங்கப்பாண்டி என்பவரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு
இந்த நிலையில் மாவட்ட செயலாளராக அறிவித்த SR.தங்கபாண்டி மதுரை வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக தொண்டர்கள் அவரது வீட்டில் இருந்து செல்லூர் 60 அடி சாலையில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகம் வரை மேளதாளம் முழங்க காரில் ஊர்வலமாக அழைத்துவந்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து கையில் வீரவாள் வழங்கி அலுவலகத்தின் முன்பு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம்
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மாவட்ட செயலாளர் கூறுகையில், 30 ஆண்டு காலமாக ரசிகராக இருந்த என்னை மாவட்ட செயலாளராக அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை மாபெரும் வெற்றிக்களமாக மாற்றி 2026 தேர்தலில் தலைவர் விஜயை முதல்வர் ஆக்குவோம் என்றார். 2026 தேர்தலுக்காக மக்கள் பணியாற்ற வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, தொடங்கிய மக்கள் பணி தொடர்ச்சியாக செய்யவும் மக்களுக்கான திட்டங்களை சென்றடைய தலைவரின் ஆலோசனைப்படி செய்ய உள்ளதாக தெரிவித்தார். மற்ற கட்சிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது ஊர்வலம் செல்லும் பொழுது காவல்துறையினர் தடுப்பதில்லை ஆனால் வளரும் கட்சிகள் எங்களைப் போன்ற நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் மக்களை சந்திப்பார் விரைவில் மதுரையில் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Udhayam Theatre: அஸ்தமனம் ஆகும் உதயம் தியேட்டர்! தொடங்குகிறது இடிக்கும் பணி - கண்ணீரில் ரசிகர்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Gas Cylinder: பட்ஜெட்டிற்கு முன்பே ஜாக்பாட்..! சிலிண்டர் விலையை குறைத்து அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion