மேலும் அறிய
TVK Protest ; அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, அவர்களை பற்றி பேச அவசியம் இல்லை - சி.டி.நிர்மல் குமார் பேட்டி !
எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. - சி.டி.நிர்மல்குமார்.

சிடி நிர்மல்குமார்
Source : whatsapp
பாஜக எங்களின் கொள்கை எதிரி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. - த.வெ.க., மாநில இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் பேட்டி.
SIR-க்கு எதிர்ப்பு
தமிழ்நாட்டில் (SIR)- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது, தேர்தல் ஆணையம். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக மாநில இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இருக்கிறது. சராசரியாக இந்த தீவிர வாக்கு திருத்த பணியில் 69 ஆயிரம் பூத்துகளுக்கு பி எல் ஓ நியமித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று வேலையை முடித்துவிட்டு இந்த வேலையை செய்ய வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஆசிரியர்களை அடிமை போல நடத்தி வருகிறார்கள். சராசரி மனிதரால் தினசரி 10 விண்ணப்பங்கள் தான் சரிபார்க்க முடியும். திமுகவினர் ஆசிரியர்களை மிரட்டி விண்ணப்பங்களை வாங்கி கையாடல் செய்து வருகின்றனர்.
விரைவில் எப்படி செய்ய முடியும்
பிப்ரவரி மாதத்தில் வாக்காளர் பட்டியல் வரும்போது கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க வாய்ப்பு உள்ளது. இது நிறைய மக்களுக்கு தெரியவில்லை, இதை அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதை சரி செய்ய ஆதார் கார்டை இணைத்து செய்யலாம். அதையெல்லாம் செய்யாமல் சீக்கிரமாக அவசர அவசரமாக இதை செய்கிறார்கள். திமுக எதையோ இதை மறைக்கிறார்கள், குறுக்கு வழியில் வர பார்க்கிறார்கள். திமுகவிற்கு வேறு வழியே இல்லை. தலைவர் விஜய் தான் முதல்வராக வருவார். அதை தாங்க முடியாமல் குறுக்கு வழியில் இதை பயன்படுத்தி நிறைய இடங்களில் முறைகேடு செய்கிறார்கள். சார் விண்ணப்பம் குறித்து உதவி செய்ய வேண்டும். இதில் நடக்கக்கூடிய தவறுகளை கண்காணிக்க வேண்டும். சார் விண்ணப்ப படிவங்களை ஒரு வருடத்திற்கு முன்பு செய்ய வேண்டும். மாதத்தில் எப்படி செய்ய முடியும். ஆசிரியர்கள் பொதுத் தேர்வு இருக்கிறது , எப்படி அவர்களால் பாடம் நடத்த முடியும்.
ஆட்சியில் இல்லாத அதிமுக குறித்து பேச அவசியம் இல்லை
காங்கிரசுடன் விஜய் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் வதந்தி. இதுகுறித்து முறைப்படியாக பொதுவெளியில் அறிவிக்கப்படும். இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தலைவரின் ஒரே குறிக்கோள் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. யாரெல்லாம் தவெக குறித்து பேசுகிறார்களோ அவர்களின் நோக்கத்தை மறந்து பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் திமுகவுடன் அங்கத்தில் இருக்கிறார்கள். திமுகவை பேசுவதை விடுத்து எங்களை பேசினால், திமுகவிற்கு மறைமுகமாக வேலை செய்கிறார்கள். எங்களின் கொள்கை எதிரி யார் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம் தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி. அவர்களைச் சொல்லி பேசி நாங்கள் மக்களை குழப்ப வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மக்களுக்கு முக்கிய விரோதியாக இருக்கக்கூடிய திமுக தான் அரசியல் எதிரி, கொள்கை எதிரி பாஜக, இவர்கள் இருவர்கள் குறித்து தான் நாங்கள் பேச முடியும். எங்களின் கூட்டணி நிலையில் சென்ற மாதம் எப்படி இருந்தோமோ, அப்படிதான் தற்போதும் இருக்கிறோம். பாஜக எங்களின் கொள்கை எதிரி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கட்சியின் தலைமையை ஏற்று யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நடிகர் அஜித் குறித்து கேள்விக்கு,
எங்கள் தளபதியின் நண்பர் நடிகர் அஜித், நிறைய ஊடகங்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்த ஊடகங்கள் இதை தவறாக பேசியிருக்கிறார்கள். அதற்கு சரியான விளக்கம் அஜித் கொடுத்துள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















