மேலும் அறிய

Velmurugan: 'கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சி' - வேல்முருகன் அறிக்கை!

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியை மோடி அரசு தருகிறது  என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியை மோடி அரசு தருகிறது  என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

’2024 பொதுத்தேர்தல் : ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுக!

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியை நடத்தி வரும் மோடி அரசு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்காமல், 2024 பொதுத்தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக பல்வேறு வகையிலான யுக்திகளை கையாண்டு வருகிறது.

குறிப்பாக, மோடி அரசின் மோசமான ஆட்சியை குறித்த விமர்சனத்தை, எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் எந்த விதத்திலும் கொண்டு சேர்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது, மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துள்ள மோடி அரசு, பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் தி வயர், குவிண்ட் போன்ற முற்போக்கு - ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் இணைய ஊடகங்களை ஒடுக்குவதற்கான பணிகளையும் முடக்கி விட்டுள்ளது.

பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என பல்வேறு சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்கள் வெளிப்படுத்தியதன் விளைவான நாட்டு மக்கள் முன்பாக அம்பலப்பட்டும் நிற்கும் மோடி அரசு, இணைய ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், அந்த ஊடகங்களை ஒடுக்க வேண்டும். இதுவே, மோடி அரசின் நோக்கம்.

இதற்காகவே, அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022- யை, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்திருந்தது. இதன் வாயிலாக, இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது.

சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக, மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழும் சமூக ஊடகங்களை,  கண்காணிக்கவும் ஒடுக்கவும் மோடி அரசு களம் இறங்கியுள்ளது. தனது சர்வாதிகாரம், பாசிச ஆட்சி குறித்த விமர்சனத்தை, ஜனநாயக சக்திகள் நடத்தும் இணைய ஊடகங்கள் அம்பலப்படுத்தாவிட்டால், 2024 பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள், மீண்டும் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள்.

எனவே, நாட்டு மக்களுக்கு எதிரான பாஜகவின் தேர்தல் கூட்டணியை வீழ்த்த, நாடெங்கும் பரவியுள்ள முற்போக்கு - ஜனநாயக சக்திகளையும், ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதல்வர் அவர்கள் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது’ என்று தெரிவித்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget