TTV Dinakaran:"நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும்" - தினகரன்
இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் டிடிவி தினகரன் பேட்டி.
சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அமைச்சர் பொன்முடி வழக்கு குறித்த கேள்விக்கு, தீர்ப்பு தற்பொழுது வந்துள்ளது. தண்டனை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை இருந்தால் தான் தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும். தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் இன்னும் வரவில்லை. அதன் பிறகு தான் அவர்கள் முடிவு செய்பவர்கள் என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எதிர்பாராத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அங்கு மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பணிகளை துரிதப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும். தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளேன் என்றார். சேலம் மாடர்ன் தியேட்டர் விவகாரத்தில் உரிமையாளருக்கு எந்த ஒரு அச்சுறுத்தல் இல்லாமல் அரசு பாதுகாக்க வேண்டும். அப்படி எதிர்ப்பை மீறி சிலை அமைத்தால் மக்களை அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர் கூறிய கருத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதன் உரிமையாளருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவர் தொடக்கத்திலேயும் அறிவிப்பு வெளியாகும் என்றார்.