மேலும் அறிய

"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராக பேசும் நபர்களை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி.

ஊழல்,ஊரல், போதை இதனால் முதலில் இரண்டு விக்கெட்டுகள் தமிழ்நாடு அமைச்சரவையில் விழுந்திருக்கிறது, இன்னமும் பல விக்கெட்டுகள் விழும் பார்த்து ரசியுங்கள்,  முதல்வரே இந்த விக்கெட்டுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். மதுரை மாநகர பாஜக தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட 50 மேற்பட்ட பா.ஜ.கவினர் பங்கேற்று அம்பேத்கர் குறித்த கருத்து சார்ந்த கருத்தக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹச். ராஜா பேசும் போது.."காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்வத்தில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவம் தேடி வேட்டையாடி வருகிறது, பாகிஸ்தானுக்கு இந்திய தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. பாகிஸ்தானின் இச்செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சரே 30 ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி  பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட தயராகி வருகிறார்.
 
கண்டிக்கத்தக்கது
 
 உள்நாட்டில் நாட்டிற்கு எதிராக பேசுவதை சிலர் கலாச்சாரமாக  கொண்டிருக்கிறார்கள். சீமான், முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராம்மையா,  திருமாவளவன் கம்யூனிஸ்ட் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பேசி போர் தொடுக்கக் கூடாது என்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக பேச வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள் ஆக உள்ளது.  சமூக வலைதளத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகளை ஏவி 1400 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்,  ஆனால் அங்கிருக்கும் மக்கள் அந்நாட்டிற்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. வெளிநாட்டில் உள்ள தேச விரோதிகள்விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம் உள்ளனர். 1947 ல் விடுதலை நாளை துக்க தினமாக அனுசரித்தவர்கள் இங்கே உள்ள திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். அமெரிக்கா பல்வேறு மாகாணங்களை கொண்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பிறகு அந்நாட்டுக்கு எதிராக யாரும் பேசுவது கிடையாது. ஆனால், இங்கே தேச விரோத கொள்கைகளை பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது
 
யுத்தம் வரவேண்டும் என நாங்கள் விரும்பவில்லை அப்படி யுத்தம் வந்தால் அந்த நாட்டுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்களா என என்ன?,  பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மத வெறி உள்ளிருப்பது தெரிகிறது. திருமாவளவனுக்கு நாட்டுப்பற்றை கிடையாது. இவர்களைப் போன்றோரை தொடர்ந்து கண்காணிப்பில்லாமல் விட்டால் இவர்களாலே நாட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 1989-இல் காஷ்மீரில் உள்ள அனைத்து இல்லங்களிலும் பருக் அப்துல்லா முதல்வராக இருந்த நேரத்தில் ஒன்று இஸ்லாமியராக மாறு அல்லது இந்த இடத்தை விட்டு காலி செய்ய என்றும் அப்படி இல்லை என்றால் கொலை செய்யப்படுவாய் என்றும் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைச்சிருக்கோம், காவிரியில் நீர் கொடுக்காத துணை முதல்வரை அழைத்து ஆதரிக்கும் இந்த கூட்டம். பாகிஸ்தானுக்கு சிந்து நதியை நிறுத்துவைத்து பற்றி விமர்சனமாக பேசுகிறார்கள்.
 
விக்கெட் கிடைக்கிறது
 
ஊழல்,ஊரல், போதை இதனால் முதலில் இரண்டு விக்கெட்டுகள் தமிழ்நாடு அமைச்சரவையில் விழுந்திருக்கிறது, இன்னமும் பல விக்கெட்டுகள் விழும் பார்த்து ரசியுங்கள், முதல்வரே இந்த விக்கெட்டுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த வாரம் துரைமுருகனுக்கு எதிரான முடித்து வைக்கப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம் ஐ பெரியசாமிக்கு எதிரான முடித்து வைக்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.  
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget