மேலும் அறிய

VCK Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி இனி வேடிக்கை பார்க்காது ; திமுக அதிமுக மீது திருமாவளவன் தாக்கு

Thuirumavalavan : பெரியாரை அந்நியர் என சொல்பவர்கள் அம்பேத்கரை அன்னியர் என சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ?

தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முளைத்து விட்டார்கள். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வேடிக்கை பார்க்காது: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு:

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மறைந்த கட்சி தொண்டர் மகேந்திரன் புகைப்படத்தை திறந்து வைத்து அஞ்சி செலுத்தினார். தொடர்ந்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உயிரிழந்த நிர்வாகியின் குடும்பத்தினருக்கு புரட்சி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் உரையாற்றிய திருமாவளவன். 


இன்றைக்கு தந்தை பெரியாரைப் பற்றி கொச்சையாக விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முளைத்து விட்டார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும் அவர்கள் மூலமாகவே அப்பளமாகியுள்ளது. பெரியார் இயக்கம் தொடங்கிய காலம் தொட்டு அவரை யார் வீழ்த்த வேண்டும் என நினைத்தார்கள் என்பதை நாடு அறியும். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் விழுந்தார்கள். ஆனால் பெரியாரை வீழ்த்த முடியவில்லை. பெரியார் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. விடுதலை சிறுத்தைகளுக்கும் பெரியார் தான் வழிகாட்டி. கொள்கையாசான். பெரியாரை விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது. பெரியாரையே அன்னியர் என சொல்பவர்கள் அம்பேத்கரை அன்னியர் என சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.

பெரியார் தமிழர் இல்லை தமிழ் தேசத்தின் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டியர் என சொல்லி அந்நியப்படுத்துவார்கள். இது அரைவேக்கட்டுத்தனமான அரசியல். அற்பத்தனமான அரசியல். இனவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கும் ஒரு முயற்சி. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக ஆண்ட கட்சியாக இருந்ததால் நாம் இறங்கி போய் பதில் சொல்ல தேவையில்லை என அமைதி காக்கலாம் ஆனால் அப்படி விடுதலை சிறுத்தைகள் வேடிக்கை பார்க்க முடியாது. நம்முடைய கொள்கை அடையாளங்களை சிதைக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாத்தாக வேண்டும். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டிற்கு கேடு. எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற கவலை மேலோங்குகிறது. இந்த தேசத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கவலை மிஞ்சுகிறது. மோடியை எப்படியாவது இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று பெரும் முயற்சி மேற்கொண்டோம். அகில இந்திய அளவில் 28 கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணி என ஒருங்கிணைத்தோம் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. ஆனாலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. எப்படி இன்னும் ஐந்தாண்டு காலம் தாக்குபிடிக்கப் போகிறோம் என தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சதி முயற்சிகளை தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தை நாளுக்கு நாள் நீர்த்துப் போக செய்கிற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கான தனி சட்டத்தை சீர்குலைக்க வக்பு வாரியத்தை ஆக்கிரமிக்க புதிதாக ஒரு சட்டத்தை அடாவடித்தனமாக கொண்டு வருகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய ஒரு அரசு பாஜக அரசு, மோடி அரசு இதனை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளை வக்பு வாரிய சட்டத்தை மீண்டும் அமல்படுத்த போகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நாளை நானும் ரவிக்குமாறு நாடாளுமன்றம் செல்கிறோம். இப்படியான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் பாஜகவுக்கு பாடப் புகட்டவும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த கூட்டணி சிதறடிக்க என்னென்னவோ முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டார்கள் அந்த சதிகளை எல்லாம் முறியடித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

 

தலைப்பு செய்திகள்

Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget