பிரதமர் காலில் நெடுஞ்சாண்கிடையாக இல்லாமல் கம்பீரமாக அமர்ந்தார் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன் டெல்லி வந்து பிரதமரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தார்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளை டெல்லி முதல்வருடன் சென்று நேரில் பார்வையிட்டார், கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கியிருக்கும் அவர் தமிழக மக்களின் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துரைக்கும் வாய்ப்பையும் பெற்றார், இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, நேற்றும், இன்றும் டெல்லி முதல்வருடன் சென்று அங்குள்ள மருத்துவமனைகள், அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு வருகிறார்.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர்களை சந்தித்து தமிழக மக்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அவர்களிடம் மனுக்களையும் அளித்து உள்ளார், குறிப்பாக தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் என தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அளித்து உள்ளார், இன்று காலை நிதியமைச்சரையும், மாலை தொழில் வர்த்தகத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார், டெல்லியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பு எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன் டெல்லி வந்து பிரதமரின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து கிடந்தார், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் யார் காலிலாவது விழுந்தாரா? தன்னை காப்பாற்றி கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு காவடி எடுத்துக்கொண்டு வந்தாரே அதுபோல நாங்கள் வந்திருக்கிறோமா என விமர்சனம் செய்தார், முதலமைச்சர் ஸ்டாலின் கம்பீரமாக அமர்ந்து கொண்டு பிரதமரிடம் தமிழகத்தின் கோரிக்கையை எடுத்துக் கூறினார், உங்களை போல காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் இல்லை என பேசினார்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்