Tasmac Complaint: அண்ணா என்று அழைத்த பெண்!.. போலீசுக்கு உடனடியாக உத்தரவு போட்ட அமைச்சர்
Tha Mo Anbarasan: சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில், பெண் ஒருவர் புகார் தெரிவித்த நிலையில் , உடனடியாக அருகில் இருந்த காவலரை அழைத்து, அமைச்சர் தா மோ அன்பரசன் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை ஆலந்தூர் அருகே , நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் , சட்டவிரோதமாக மது விற்பனை குறித்து பெண் ஒருவர் புகார் தெரிவித்த போது, காவல்துறை உதவி ஆய்வாளரை அமைச்சர் கண்டித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்: பெண் புகார்
சென்னை ஆலந்தூர்க்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ, அன்பரசன் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர்,அமைச்சரை அண்ணா என அழைத்து, இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது அண்ணா என தெரிவித்தார், மேலும் அந்த பெண் தெரிவிக்கையில், பலமுறை காவல்துறையிடம் புகார் தெரிவித்தும், வருகிறார்கள் , வந்து பிடிக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை; ஆனால் மன்னித்து விட்டுவிடுகிறார்கள்.
இந்த ஏரியாவில், வக்கீல் இருக்கிறார். அவர் , கைதானவர்களுக்காகச் சென்று , கூப்பிட்டு வந்து விடுகிறார்.
Also Read: Rahul Gandhi: கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் தைத்த செருப்பை தரமாட்டேன்: கூலி தொழிலாளி நெகிழ்ச்சி..
அமைச்சர் எச்சரிக்கை:
உடனடியாக , அமைச்சர் தா.மோ, அன்பரசன் கூட்டத்தில் இருந்த காவல் உதவியாளரை அழைத்து, இதுபோன்ற நடப்பது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
வழக்கு போட்டு என்ன பண்றது, தொடர்ந்து மது விற்பனை நடக்குதே என கேள்வி எழுப்பினார். நம்ம ஏரியாவில் , இது புதுசா இருக்கே என கேள்வி கேட்டார்.
இதையடுத்து, இதுபோன்ற புகார் வரக்கூடாது, இல்லையென்றால் ஆணையரிடம் போக வேண்டிவரும் என உதவி காவலரை எச்சரித்தார், அமைச்சர் தா.மோ. அன்பரசன்.
இதனால், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Also Read: "7:30 மணிக்கு நீங்க ஏன் வெளிய வந்தீங்க" பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் போலீஸ் கேட்ட கேள்வி!