கருத்து சுதந்திரம் இளையராஜாவுக்கு இல்லையா? - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
இசைஞானி இளையராஜாவை விமர்சிப்பது சரியா? என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், அவர் சமீபத்தில் அவர் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து கூறிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் இளையராஜாவிற்கு கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில், சிலர் இளையராஜாவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இளையராஜாவிற்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 17, 2022
(1/2)@PMOIndia @narendramodi @ilaiyaraaja
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே !!!!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா?
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 17, 2022
அல்லது சிலருக்கு மட்டும் தானா?
தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.
விழித்துக்கொள் தமிழகமே !!!!
(2/2)#Ilaiyaraaja #PMModi#Modifullfillsambedkardreams#AmbedkarJayanti
அவரது கருத்துக்கு கீழ் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்