AIADMK: அதிமுகவில் 4 குழு.. சட்டப்பேரவையில் அடுத்து என்ன நடக்கும்? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் நிர்வாகிகள் செயல்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான மோதல் நிலவியதை அடுத்து, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அத்துடன் ஒபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தற்போது அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அதில் நாங்கள் யாரும் தலையிட முடியாது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புகள் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். தற்போது அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் வகையில் முக்கியமான மக்கள் பிரச்னை இது இல்லை.
#BREAKING | எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் விருப்பு, வெறுப்பின்றி நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு https://t.co/wupaoCQKa2 | #AIADMK #ADMK #Edappadipalanisamy #OPanneerselvam #Appavu pic.twitter.com/fa1dDRsA6U
— ABP Nadu (@abpnadu) August 17, 2022
ஆகவே இந்த விவகாரத்தில் எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல் சரியான முடிவு எடுக்கப்படும். அதிமுக தற்போது 4 குழுக்களாக உள்ளனர். அவர்களின் உட்கட்சி பிரச்னையில் அரசு எப்போதும் தலையிடாது. சட்டமன்றத்தை எப்படி ஜனநாயக முறையில் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ஒருங்கிணைப்பாளரான தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடத்தப்படுவதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் அ.தி,மு,க, பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்