மேலும் அறிய
Advertisement
தமிழகம் இன்று சூதாட்ட போதை களமாக மாறியுள்ளது - சி.வி .சண்முகம்
அரைவேக்காட்டு தனமாக சட்டமியற்றி கவர்னருக்கு அனுப்பி அதை கவர்னர் காலதாமதம் செய்து திருப்பி அனுப்புகிறார்- சி.வி. சண்முகம்
விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான மாம்பழபட்டு சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் குருசுபராஜபதி அறக்கட்டளை தொடக்க விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் , சமுதாயத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கு பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சார்ந்து அறக்கட்டளை தொடங்க வேண்டும் என பலமுறை எண்ணியதுண்டு ஆனால் என்னால் தொடங்க முடியாமல் போனது. இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதால் போதை போன்ற தவறான வழியில் செல்பவர்களை தடுக்கும் நோக்கில் செயல்படுவார்கள் என குறிக்கோளில் குறிப்பிட்டுள்ளதை வரவேற்பதாகவும், அறக்கட்டளை தொடங்குவது சுலபம் ஆனால் அதனை சிறப்பாக வழிநடத்துவது கடினம் இந்த அறக்கட்டளை சிறப்பாக நடைபெற வாழ்த்துவதாக தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேட்டி:-
தமிழகம் இன்று சூதாட்ட போதை களமாக மாறியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதுமாக போதைகளமாக உள்ளது. 24 மணிநேரமும் டாஸ்மாக் திறந்திருக்கிறது. கஞ்சா நீக்கமற அனைத்து பகுதிகளில் கிடைப்பதாக குற்றஞ்சாட்டினார். ஆன்லைன் சூதாட்டம் விலைமதிப்பில்லாத இளைஞர்களை பறித்து கொண்டிருப்பதாகவும் ஆன்லைன் சூதாட்டினை தடை செய்ய அனைத்து கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் ஸ்டாலின் அறைவேக்காட்டு தனமாக எதிர்கட்சிகளின் ஆலோசனையை முழுமையாக கேட்காமல், சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளாமல், திட்டமிட்டே இந்த சட்டத்தினை கொண்டு வரக்கூடாது என்பதற்காக இந்த அரசு செயல்பட்டிருக்குமோ என்று கேள்வி எழும்புவதாக தெரிவித்தார்.
அரைவேக்காட்டு தனமாக சட்டமியற்றி கவர்னருக்கு அனுப்பி அதை கவர்னர் காலதாமதம் செய்து திருப்பி அனுப்புகிறார். இந்த அரசும் கவர்னரும் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு அனுப்புவது போன்று அனுப்பி காலதாமதம் செய்கிறேன் என்று நாடகம் நடத்தி கொண்டிருப்பதாகவும், ஒருபக்கம் ஆளுநரை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு ஸ்டாலினும் அவரது மகனும் ஒன்றாக ஆளுநருடன் தேநீர், சமோசா அருந்தி கொண்டிருக்கிறார்கள். ஒருசட்டத்தை ஆளுநரிடம் ஒப்புதல் பெறமுடியாமல் அருகதையற்ற முதலமைச்சராக செயல்படுவதாக கூறினார்.
ஆள்வதற்கு திறனில்லாமல் சட்ட ஒழுங்கை காப்பாற்றாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழத்திற்கு பணிக்கு வருகிற தொழிலாளர்களை காப்பாற்ற முடியாமல் அதை மறைக்க திமுக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றஞ்சாட்டினை ஸ்டாலின் கூறி வருவதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion