மேலும் அறிய

OPS: ஜூன் மாதம் வந்துடுச்சி.. தண்ணீரை திறந்து விட சொல்லுங்க - கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்க சொல்லும் ஒபிஎஸ்!

ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கர்நாடக மாநிலத்துக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கர்நாடக மாநிலத்துக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின்மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா . காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

காவேரி நீரில் தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி. அடி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்பதும், இதில் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீர், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. அடி நீர், ஆகஸ்ட் மாதத்தில் 45.75 டி.எம்.சி. அடி நீர், செப்டம்பர் மாதத்தில் 14.70 டி.எம்.சி. அடி நீர் என மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்பதும் நீதிமன்ற உத்தரவு.

இந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், தற்போதைய நிலவரப்படி 101 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. நீர் வரத்து 324 கன அடியாக உள்ளது. ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீர் காவேரி மேலாண்மை ஆணையத்தால் கண்காணிக்கப்பட வேண்டுமென்ற நிலையில், அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடி துவங்கியுள்ளதையும், ஜூன் மாத அளவான 9.19 டி.எம்.சி.அடி நீரில், 7.54 டி.எம்.சி. அடி நீர் இன்னும் அளிக்கப்பட்ட வேண்டுமென்றும், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்தப் பதில் உபரி நீர்தான் அளிக்கப்படும், உரிய நீர் அளிக்கப்படாதது என்பதுபோல் உள்ளது.

கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பாடுபட்ட கட்சி தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , கர்நாடக முதலமைச்சருடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய 9.19 டி.எம்.சி. அடி நீரில், ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள 1.65 டி.எம்.சி. அடி நீர் போக மீதமுள்ள 7.54 டி.எம்.சி. அடி நீரினை உடனடியாக  தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Breaking News LIVE: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
Villuppuram Power Shutdown: உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
உஷார் மக்களே..! விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Embed widget