மீண்டும் இளைஞரணி தலைவர் ஆனார் தமிழ் குமரன்! ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு
பாமகவின் இளைஞரணி சங்க தலைவராக மீண்டும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை மருத்துவர் ராமதாஸ் நியமனம் செய்து மூத்த மகளுடன் இணைந்து நியமன கடிதத்தினை வழங்கினார்

விழுப்புரம்: பாமகவின் இளைஞரணி சங்க தலைவராக மீண்டும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை மருத்துவர் ராமதாஸ் நியமனம் செய்து மூத்த மகளுடன் இணைந்து நியமன கடிதத்தினை வழங்கினார். கரூர் துயர சம்பவத்தில் ஒரு முதல்வர் என்ன பணி செய்யனுமோ அதனை சரியாக செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு.,
இன்றைய தினம் மகிழ்ச்சியான நாள் நீண்ட நாள் ஆசை நிறை வேறப்போகும் நாளாகவும், தான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் தமிழ் குமரனுக்கு பாமக மாநில இளைஞசங்க தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழ்குமரனுக்கு பேராதரவு தரவேண்டும் என கூறிய அவர் நியமன கடிதத்தினை தமிழ் குமரனிடம் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி மற்றும் ராமதாஸ் வழங்கினர். அதன் பிறகு பேசிய அவர் தமிழ் குமரனுக்கு ஏற்கனவே பாமக இளைஞரணி சங்க தலைவர் கடிதம் கொடுக்கப்பட்டது.
அப்போது வானூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட இருந்த வேலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ் குமரன் வர கூடாதென தொலைபேசியில் அழைப்பு வந்ததின் பேரில் வர வேண்டாம் என மனவருத்தத்தோடு தமிழ்குமரனிடம் கூறினேன். பின்னர் கடிதத்தினை கிழித்து போட கூறிவிட்டேன். மீண்டும் ஒரு பொதுக்குழு வானூர் அருகே கூடியபோது அன்புமணியின் சகோதரியின் மகன் முகுந்தனுக்கு இளைஞரணி சங்க தலைவராக அறிவித்தபோது மைக் தன்மீது பாய்ந்ததாக கூறினார்.
ஒரு கட்சியில் பொறுப்பினை நான் விரும்பி கொடுக்கிறேன் என்றால் தமிழ்குமரனை ஏற்றுகொள்ளவில்லை சொந்த அக்கா மகனையும் ஏற்று கொள்ளாத நிலையில் மீண்டும் தமிழ் குமரனுக்கு இளைஞரணி சங்க தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். முகநூலில் கேவலமாகவும் மிக கேவலமாகவும் எழுதுகின்றனர்.
முகநூலில் ராமதாசை கழுத்தை நெறுத்து தலையை வைத்து கொலை செய்ய வேண்டுமென மாற்று கட்சியில் இளைஞரணி பதவியில் உள்ள நபர் கேவலமாக எழுதுகிறார். முகநூலில் இப்படி எழுதுபவர்களை பார்த்து அதனை கண்டுபிடித்தவர்கள் பார்த்தால் வெட்கி தலைகுணிவார்கள், சமூக வலைதளங்களில் தவறாக எழுதுபவர்களை ஊடக நண்பர்கள் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ் குமரனுக்கு கட்சியில் நல்ல பதவி வழங்கப்பட்டுள்ளது சிறப்பாக செயல்பட தானும் உறுதுனையாக இருப்பேன் என்றும் கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும், அரசியல் கூட்டங்கள் நடத்துபவர்கள் ஒரு உயிர் கூட பறிபோகாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு காவல் துறை வழிகாட்டனும் கரூர் போன்ற துயர சம்பவம் இனியும் நடக்க கூடாது என கூறினார்.
திமுகவில் இருப்பவர்கள் சதி செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிற கேள்வி சதி செய்தீர்களா என்று திமுகவினரிடம் கேட்டு சொல்கிறேன் என்றும் கரூர் சம்பவத்தில் ஒரு முதல்வர் என்ன செய்யனுமோ அதனை செய்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





















