உண்மை என சொன்ன சாப்ட்வேர்! பிரபாகரன்-சீமான் புகைப்படம் - விளக்கத்திற்கு விளக்கமளித்த சங்ககிரி ராஜ்குமார்
Seeman Photo: பிரபாகரனுடன் சீமான் புகைப்படத்தில், வீரப்பன் போல மீண்டும் ஆடியோ வெளியிட வேண்டாம் என நினைத்தேன்; ஆனால் விளக்கமளிக்க வேண்டிய நிலை என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருக்கும் புகைப்படத்தை, கணிப்பொறி மென்பொருள் கொண்டு ஆராய்ந்ததில், அந்த புகைப்படம் பொய்யானது இல்லை; எடிட் செய்யப்பட்டது இல்லை என தெரிவிக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தமைக்கு, கம்பியூட்டரில் , செயல்முறை விளக்கமளித்துள்ளார், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
பிரபாகரன் - சீமான் புகைப்பட விவகாரம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழத்திற்காக இலங்கையில் ஆயுதம் ஏந்திய போராடிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர் என கூறி வருகிறார். தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் பாதையில் பயணிக்கும் சீமான், பிரபாகரனைச் சந்தித்து பல விசயங்கள் குறித்து ஆலோசித்ததாக பல முறை பொதுக்கூட்டத்திலும், பேட்டியிலும் கூறி வருவார்.
மேலும், அவர் பிரபாகரனைச் சந்தித்ததற்கான ஆதாரமாக பிரபாகரனுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது. பிரபாகரனை அவர் சந்தித்தது சில நிமிடங்கள் மட்டுமே என்றும், பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரியதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பது உண்டு. இந்த நிலையில், சீமான் - பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அது எடிட் செய்யப்பட்டது என்று, சில தினங்களுக்கு முன்பு,இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார். ஏனென்றால், அந்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் விளக்கம்:
இதுதொடர்பாக, சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பதாவது, நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது செங்கோட்டையன் என்பவர் பணியாற்றினார். அவர் சீமானுக்கு நெருக்கமானவர். அந்த காலகட்டத்தில் செங்கோட்டையனுக்கு நான் பல வேளைகள் செய்து கொடுத்துள்ளேன். அப்போது, தலைவர் பிரபாகரன் மகேந்திரனுடன் இருப்பது போன்ற பல படங்களை டிவிடியில் எடுத்துக்கொண்டு வந்தார். சீமான் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வந்து இரண்டையும் பக்கத்தில், பக்கத்தில் வைத்து தருமாறு என்னிடம் கேட்டார். நான் எதற்கு? என்று கேட்டபோது, சர்ப்ரைசாக கொடுப்பதற்காக வேண்டும். கொடுத்தால் அவர் வீட்டில் ஃப்ரேம் போட்டு வைத்துக் கொள்வார் என்றார். அப்போது, இதுபோன்று வேலை செய்வதில் ஆர்வம்.
ஆனால், இப்போது அந்த புகைப்படத்தைப் பார்த்தால் நிறைய குறைகள் தெரியும். அவருடைய தலைக்குப் பின்னால் நிழல் இருக்கும். சீமானுக்கு கைக்குப் பின்னால் நிழல் இருக்காது. தலைவர் பிரபாகரன் படத்திற்கு பின்னால் அந்த நிழல் இருக்காது. அந்தளவு தெளிவாக பண்ணவில்லை. ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்காகத்தானே என்று பெரியதாக துல்லியமாக பண்ணவில்லை. அப்படி பண்ணிக் கொடுத்ததுதான் அந்த புகைப்படம் என தெரிவித்தார்.
பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், இதற்கு மேலும் , பொறுக்க கூடாது என உண்மையை சொகிறேன் என தெரிவித்தார். ஆனால் சீமான், இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
உண்மை என சொன்ன சாப்ட்வேர்: மீண்டும் விளக்கம்
இந்நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் , பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை , கணிப்பொறியில் உள்ள மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில், இது உண்மையான புகைப்படம்தான் என தெரிய வந்ததாகவும், தெரிவித்த வருவதற்கின்றனர்.
இதற்கு மீண்டும் விளக்கமளித்துள்ள இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், “ விளக்கத்திற்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது; வீரப்பன் காட்டில் இருந்து ஆடியோ வெளியிடுவது போல வெளியிடனுமா என நினைத்தேன். ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் , இது உண்மையான புகைப்படம்தான் என்று கூறி வருகின்றனர். அந்த மென்பொருளையும் காண்பிக்கின்றனர்.
இதை சொல்லவில்லையென்றால் சரியாக இருக்காது என்பதற்காக மீண்டும் செயல்முறை வாயிலாக விளக்கமளிக்கிறேன் என விளக்கமளித்து, ஏன், உங்களுக்கு உண்மை என , சாப்டேர் காண்பிக்கிறது என்பதற்கு வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.
Fact check உண்மைகள் pic.twitter.com/fcCh3f5Iaa
— Sankagiri RAJKUMAR (@Rajkumar_Dir) January 25, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

