மேலும் அறிய

சசிகலாவிடம் ரூ.13 கோடி பணம் வாங்கிய சீமான்..? - உண்மையை உடைத்த நிர்வாகிகள்

தமிழர்களிடமிருந்து பெறப்படும் திரள் நிதியின் மூலம் சீமான் பல கோடி சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜா குற்றச்சாட்டு.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி புதிதாகப் "புரட்சித் தமிழர்" என்ற கட்சியினை உருவாக்கி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளராக  ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசுகையில், கடந்த ஒன்றாம் தேதி "புரட்சித் தமிழர்" என்ற கட்சி துவங்கப்பட்டதாகவும் அப்பொழுது நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவை தமிழ்நாட்டின் சாதி வாரி கணக்கெடுப்பு, டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும், நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் தமிழ் தேசிய அரசியலை மையப்படுத்திய இந்த கட்சி உருவாக்கப்பட்ட இருப்பதாகவும், தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக இருக்கும் திராவிட கட்சிகள் ஊழலில் திகைத்து இருப்பதாகவும் மத்திய அரசு அடிமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் 

தற்போது குறிப்பிட்ட தகுந்த வளர்ச்சி நாம் தமிழர் கட்சி அடைந்திருப்பதாகவும், அது மட்டும் இன்றி சீமான் மட்டும் அவருடன் இருக்கும் சில ஆதரவாளர்கள் மட்டுமே அந்த கட்சியின் வளர்ச்சி அடைவதாகவும் அடிமட்ட தொண்டர்கள் யாரும் வளர்ச்சி அடைவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார் .

கட்சித் தொண்டர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர்கள் தனது கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று  சீமான் கூறுவார். தமிழக மக்களை முட்டாளாக்கி சீமான் பயனடைவதாகவும், தமிழ் தேசியம் குறித்து கருத்துக்கள் எதுவும் சீமான் பேசுவதில்லை, மத்திய மாநில அரசுகளுடன் சீமான் இணக்கமாக இருப்பதாகவும், ஆகையால் அந்தக் கட்சி வளர்ச்சி அடைகிறது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூட வாய்ப்பு இருப்பதாகவும், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்ததாகவும்  அக்கட்சி கொள்கைக்கு விரோதமாக செயல்படுவதால்  அதிலிருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டதாகவும் ,நாம் தமிழர் கட்சியினை வாரிசு கட்சியாக மாற்றி இருப்பதாகவும் தனது மனைவி மற்றும் மகனைக்  கட்சிக்குள் கொண்டு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சீமான் உருவாக்கவில்லை சுபா முத்து குமார் உள்ளிட்ட பல தமிழ் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது. பிரபாகரனையே தான் அறிமுகப்படுத்தியது போன்று சீமான் மேடைகளில் பேசி வருவது ஏற்புடையதாக இல்லை, தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று கூறுகிறார் தமிழர்களுக்காக தற்போது வரையில் என்ன செய்துள்ளார் .

தற்போது 36 லட்ச வாக்குகள் சீமானுக்கு விழுந்திருப்பது என்றால் அது தமிழ் தேசியத்திற்காக சீமான் பேசியதற்காக விழுந்த வாக்குகள் இல்லை. சீமான் பல கோடி சம்பாதித்து வைத்திருப்பதாகவும், உலகத் தமிழர்கள் திரள் நிதியின் மூலமாக அதிகளவு வருவாய் கிடைப்பதாகவும் அதில்  சீமான் தனது மனைவி மற்றும் அவரது பெயரில் வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் புகார் கூறினார்.

கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகள் மட்டுமல்ல கட்சிக்காக உழைக்கும் பலரை பொதுவெளியில் விமர்சனம் செய்வதாக காளியம்மாள் போன்ற நிர்வாகிகள் எங்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

2011இல் சசிகலாவிடம் 13 கோடி ரூபாய் பணம் சீமான் வாங்கியதாகவும் இது போன்ற தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளிடம்  வேட்பாளர் அறிவிக்கும்பொழுது பணத்தைப் பெற்றுக் வேட்பாளர்களை அறிவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?
மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Embed widget