மேலும் அறிய

Sasikala: மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி - அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..!

சசிகலா வந்த உடன் அங்கிருந்த சில அதிமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். சசிகலா வருவது அறிந்ததாலேயே ஓபிஎஸ், இபிஎஸ் அங்கிருந்து விரைந்து சென்றதாக கூறப்படுகிறது.

மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அவைத்தலைவருமானவர் மதுசூதனன், 80 வயதான அவர் கடந்த சில தினங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடலுக்கு  சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்பின்னர், மதுசூதனன் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். சசிகலா வந்த உடன் அங்கிருந்த சில அதிமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். சசிகலா வருவது அறிந்ததாலேயே ஓபிஎஸ், இபிஎஸ் அங்கிருந்து விரைந்து சென்றதாக கூறப்படுகிறது.


Sasikala: மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி - அதிமுக கொடிகட்டிய காரில் வந்தார்..!

முன்னதாக, மதுசூதனன் உடலுக்கு உடலுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தியபின், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மதுசூதனன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். மேலும், முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை 4 மணியளவில் மதுசூதனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அ.தி.மு.க. அவைத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் மதுசூதனன். 80 வயதான அவர் எம்..ஜி.ஆர். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர்.  மதுசூதனன் கட்சி வழியாக அறியப்பட்டது 1972க்குப் பிறகுதான் என்றாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மன்றத்தலைவர் மது அண்ணன் என்பதுதான் இவரது ஆதிகால அடையாளம். பின்பு கட்சியினரிடையேயும் மது அண்ணன் என்கிற பெயரே இவருக்கு நிலைத்துப்போனது. எம்.ஜி.ஆரால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவர், பின் கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 


எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்டம் கண்டபோது நங்கூரமென இருந்து அது கவிழ்ந்துவிடாமல் காத்தவர் மதுசூதனன். எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பிறகு கட்சி ஜானகி அணி. ஜெயலலிதா அணி எனப்பிரிந்த காலத்தில் ஜெயலலிதா அணியைத் தேர்ந்தெடுத்தார். சிலர் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்த காலத்தில் சுமார் ஒருவார காலம் போயஸ் தோட்டத்துக்குக் காவல் இருந்தார். அந்தக்காவல் 1989ல் சட்டசபைக் கலவரத்தின்போது சட்டமன்றம் வரை நீடித்தது. 

இதே மதுசூதனன்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்தின் பக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். 2007ம் ஆண்டுமுதல் கட்சியின் அவைத்தலைவராக இருந்துவரும் மதுசூதனனை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததன் காரணமாகக் அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார் சசிகலா. 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Embed widget