வேளச்சேரி மறுவாக்குப் பதிவு ஏன்? உண்மையில் நடந்தது என்ன?

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-இல் மீண்டும் வரும் 17-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-இல் மீண்டும் வரும் 17-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அனல்பறந்து வந்த தேர்தல் பரப்புரைகள் பல பரபரப்பான நிகழ்வுகளுடன் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதியோடு ஓய்ந்தது. அதன் பிறகு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய பாதுகாப்பின்றி ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச்சென்ற சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர்கள் கொண்டு சென்றது பழுதான விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் அப்போது விளக்கமளித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.வேளச்சேரி மறுவாக்குப் பதிவு ஏன்? உண்மையில் நடந்தது என்ன?

விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். பழுதான அந்த இயந்திரத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் 200 ஓட்டுக்கள் உள்ள அந்த பகுதியில் 15 வாக்குகள் அந்த இயந்திரத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு மீண்டும் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தற்போது கூறியுள்ளார். 

மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ள வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, அமமுக சார்பில் சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எம். கீர்த்தனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.    

Tags: Assembly elections TN Elections VVPAT Re Election Velachery

தொடர்புடைய செய்திகள்

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு