மேலும் அறிய

போடியை கேட்கும் ஓபிஎஸ்.! நேர்காணல் செய்யும் ஸ்டாலின்- அறிவாலயத்தில் இன்று நடக்கும் சுவாரஸ்யம்

திமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் நேர்காணலில் போடிநாயக்கனூர் தொகுதியில் சீட் கேட்டு ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் தொகுதி பங்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 35 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கூட்டணியை பலப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை இணைத்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விட தற்போது 9 கட்சிகள் புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே இந்த கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுவும் பெற்றப்பட்டது. அந்த வகையில் 15,372 விருப்ப மனுவை வழங்கினார்கள்.

வேட்பாளர்களிடம் நேர்காணல்

இதில் பெரும்பாலும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (மார்ச் 17) புதுச்சேரி, காரைக்கால் ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதனையடுத்து இன்று (மார்ச் 18) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் நடைபெறுகிறது. நாளை மார்ச் 19ஆம் தேதி கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நேர்காணல் நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த நாட்களில்  வட மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவில் ஓபிஎஸ்

இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிரிந்தது. இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களம் இறங்கி ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போரட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் திமுகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேர்காணலில் ஓபிஎஸ்

இந்த நிலையில் திமுக சார்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் சார்பில் அவரது மகன் ரவிந்தீரநாத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.இதனையடுத்து இன்று மதியம் தேனி மாவட்டத்திற்கான விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்கவுள்ளார்.  நேர்காணலில் பங்கேற்பவரிகளிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் ஸ்டாலின், ஓபிஎஸ்யிடம் என்ன கேள்வி எழுப்புவார் என்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Embed widget