"சட்டப் போராட்டத்தை தொடரும் மன வலிமையை இரட்டிப்பாக்குகிறது…", குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ்!
இந்த தீர்ப்பின் காரணமாக ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் குடும்பப் பெயரைக் குறிப்பிட்டது தொடர்பாக கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரிய மனுவில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செயது, ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பதிலளித்த காங்கிரஸ், "இந்தத் தீர்ப்பு இந்த சட்ட போராட்டத்தை மேலும் தொடருவதற்கான எங்கள் உறுதியை இரட்டிப்பாக்குகிறது" என்று கூறியுள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு
ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், "ராகுல் ஏற்கனவே இந்தியா முழுவதும் 10 வழக்குகளை எதிர்கொண்டுள்ளார், அவரை குற்றவாளி என்று தீர்ப்பளிப்பதில், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவு “நியாயமானது, சரியானது மற்றும் சட்டப்பூர்வமானது” என்று கூறினார். மேலும் தண்டனையை நிறுத்த நியாயமான காரணம் இல்லை என்றார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டு, "ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி பெஞ்ச் அளித்த தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம். இது இந்த வழக்கை மேலும் தொடர்வதற்கான எங்கள் உறுதியை இந்த தீர்ப்பு இரட்டிப்பாக்குகிறது," என்றார். இந்த தீர்ப்பின் காரணமாக ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
We have noted the verdict of the single-judge bench of the Gujarat High Court on the disqualification of @RahulGandhi. The reasoning of the Hon'ble judge is being studied, as it should be, and Dr. Abhishek Singhvi will be briefing the media in detail at 3pm. The judgement only…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 7, 2023
கர்நாடக துணை முதல்வர்
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினர். கர்நாடகா துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தடுக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர் வெளியில் இருந்துதான் மிக வலுவாக வெளிப்படுவார். "நியாயம் வெற்றி பெறாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஜனநாயகத்தின் கொலை. இருப்பினும், ஒட்டுமொத்த நாடும், எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்திக்கு ஆதரவாக நிற்கின்றன. அதை ஒருங்கிணைக்க நாடு முழுவதும் போராடும் மாபெரும் தலைவர். இதை பாஜக தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தடுக்க நினைக்கிறார்கள். இனிமேல்தான் அவர் (ராகுல் காந்தி) மேலும் வலுப்பெறுவார் என நான் உணர்கிறேன்,” என்றார்.
#WATCH | Congress workers raise slogans and protest at party Headquarters in Delhi after Gujarat High Court's verdict on defamation case against Rahul Gandhi pic.twitter.com/K80KfGs5Wh
— ANI (@ANI) July 7, 2023
தீர்ப்புக்கு பாஜக தரப்பு கருத்து
குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி, “உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும், அத்தகைய வரலாற்றை உருவாக்கக்கூடாது,” என்று கூறியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ ஆர் அசோக், ராகுல் காந்தி தவறு செய்துவிட்டார், தண்டிக்கப்பட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றார். “குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ராகுல் காந்தி தவறு செய்தார், மோடிக்கு எதிராக பேசினார், அவர் தண்டிக்கப்பட வேண்டும். மோடி என்பது ஒருவரின் பெயர் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் பெயர். அவர் மோடிக்கு எதிராக கிரிமினல் அறிக்கை அளித்துள்ளார், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்," என்றார்.
#WATCH | Gujarat High Court verdict on defamation case against Rahul Gandhi | Karnataka Deputy CM & Congress leader DK Shivakumar says, "Very unfortunate that justice has not prevailed. It is the murder of democracy. Still, the entire country & the Opposition parties stand by… pic.twitter.com/zn14mBuEBO
— ANI (@ANI) July 7, 2023
வழக்கின் வரலாறு
மோடி குடும்பப்பெயர் வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக மார்ச் 23 அன்று அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்பதால் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தண்டனைக்கு தடை கோரி, ராகுல் காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் அவரது மனு ஏப்ரல் 20 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏப்ரல் 25 அன்று, சூரத் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மே மாதம், குஜராத் உயர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நிலையில், கோடை விடுமுறைக்குப் பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.