மேலும் அறிய

"பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது; உள்ளம் ஒன்று செய்கிறது" - முத்தரசன்

 இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. பிற கட்சியினர் ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு, மாடுகளை போல் விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.. இது தொடர்பான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும் பொழுது,  இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான  ஏஐடியுசி-யின் மாநில மாநாடு டிசம்பர் ஒன்று தொடங்கி மூன்றாம் தேதி வரையில் நடைபெறுகிறது.. இந்த மாநாட்டில் தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கேரள வருவாய் துறை அமைச்சர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார்..

"தொழிலாளர்களுக்கு எதிராக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.. மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, அமல்படுத்த கூடாது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஒரு மாத காலம் நடைபெறும் வாரணாசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.. உலகின் மூத்த மொழி தமிழ் என புகழும் பிரதமர் தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது, உள்ளம் ஒன்று செய்கிறது. பாரதி குறித்தும் மிகுந்த பெருமிதத்தோடு பிரதமர் உரையாற்றியிருக்கிறார். பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று சொன்னதும் பாரதி தான். அது பாப்பாவிற்கு மட்டுமல்ல மூத்தவர்களுக்கும் சொன்னது தான். ஆனால் பிரதமருக்கு எழுதி கொடுத்தவர்கள் இதையெல்லாம் எழுதி கொடுக்கவில்லை, ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஒரு பிரதமர் பொய் சொல்லக்கூடாது. ஆனால் அவரது உரை முழுவதும் வெறும் வாய் சவடலாக இருக்கிறது. மொழியை பற்றி உயர்வாக பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை.. மாற்றான் தாய் போக்கு தான் பின்பற்றப்படுகிறது. குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அவர்களே ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. பிற கட்சியினர் ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு, மாடுகளை போல் பாஜகவினர் விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதற்கு இசைவாக  இல்லாத  தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஆளுநர்களை தவறாக பயன்படுத்தி போட்டி அரசாங்கத்தை நடத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு மிக மிக புறம்பானது. குறிப்பாக தமிழக ஆளுநர் ரவி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவே பேசுகிறார், ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப்படி தான் நியமிக்கப்பட்டுள்ளார்.  நாட்டிற்கு குடியரசு தலைவர் தலைவர்.  மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தலைவர்கள். எனவே குடியரசு அமைப்பு சட்டத்திற்குபட்டு தான் ஆளுநர்கள் செயல்படவேண்டும். நம் நாடு மத சார்பின்மை கொள்கையை பின்பற்றுகிற நாடு.. ஆனால் ஆளுநர் என்ன சொல்கிறார் என்றால் உலகத்தில் இருக்கும் பல நாடுகள் மதம் சார்ந்த நாடுகளாக தான் இருக்கிறது. அதே போல இந்தியாவும் மதம் சார்ந்த நாடு தான் என்கிறார். தமிழக ஆளுநரின் இந்த பேச்சு அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. ஆளுநரின் கருத்துக்கள் மத ரீதியிலாக அமைந்துள்ளது. இதனை வைத்து அவரை நீக்கம் செய்திருக்க வேண்டும்.

மாநில மக்களின் நலன் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மோடி அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறார். ஆறு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது பணியை சரியாக செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் தனது மரியாதையை இழந்துள்ளார். ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும்.. கூட்டணி பலப்படும். அதே வேளையில் மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட்டங்களையும் இந்திய கம்னியூஸ்ட் கட்சி முன்னெடுக்கும்" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
Toyota Hyryder Hybrid SUV: டேங்க் ஃபுல் பண்ணா 1,200 கி.மீ போகலாம்; டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் SUV விலை தெரியுமா.?
டேங்க் ஃபுல் பண்ணா 1,200 கி.மீ போகலாம்; டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் SUV விலை தெரியுமா.?
Mini Cooper Convertible: 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
Embed widget