KP Ramalingam: முதல் விக்கெட் செந்தில்பாலாஜி, அடுத்த விக்கெட் பொன்முடி தொடர்ந்து 15 விக்கெட்கள் விழப்போகிறது - கே.பி.ராமலிங்கம்
காவிரி தண்ணீர் தரமாட்டோம் என்று கூறும் மாநிலத்தின் முதலமைச்சர் அழைப்பு ஏற்று தமிழக முதல்வர் சென்று இருப்பது கண்டனத்திற்குரியது.
சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தனியார் கூட்ட அரங்கில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்கள் சந்தித்தார். கருப்புசட்டை அணிந்து தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்திற்கு பாசனத்திற்காக மூன்றேகால் லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணையில் 73 அடியில், 46 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. குறுவை முழுமையாக விளைச்சலுக்கு வந்து சேருகின்ற வரை பாசனத்திற்கு 331 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். ஆனால் நம்மிடம் இருப்பது 41 டிஎம்சி மட்டுமே உள்ளது. இப்போது தமிழக அரசு 10 ஆயிரம் கன அடி பாசனத்திற்கு விடுவிக்கப்படுகிறது. பாசனத்திற்கு இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விடுவிக்க முடியும். குடிநீர் தேவை இன்னும் நூறு நாட்களுக்கு மட்டுமே பூர்த்தியாகும். எந்த அளவிற்கு அவசர சூழ்நிலை என்பது தமிழக முதலமைச்சர் உணரவில்லை.
கேஆர்எஸ் அணையில் 89.5 அடி தண்ணீர் அளவும், 39.8 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.148 அடி மட்டுமே தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை பற்றி கவலைப்படாமல், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்தில் ஒருசொட்டு தண்ணீர் கூட தமிழகத்தில் தரமாட்டோம் என்றும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா அரசு கூறி வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் காவிரி நீர் குறித்து பேச செல்லவில்லை, எதிர்க்கட்சி கூடுகின்ற கூட்டம் பங்கிற்கு செல்கிறார் என்று முதல்வர் கூறுவது தமிழக மக்களை பற்றி என்ன கருதிக் கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. காவிரி தண்ணீர் தரமாட்டோம் என்று கூறும் மாநிலத்தின் முதலமைச்சர் அழைப்பு ஏற்று தமிழக முதல்வர் சென்று இருப்பது கண்டனத்திற்குரியது. இதனை கண்டித்து பாஜக சார்பாக கருப்புசட்டை அணிந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி கூறுகின்ற ஆட்சி அதிகாரத்திற்காக கோரிக்கை வைத்த நிலையில், தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கையை தமிழக முதல்வர் ஏன் வைக்கவில்லை. விவசாயியை பாதுகாக்க வேண்டிய நியாயமான எண்ணம்கூட, தமிழக முதல்வருக்கு இல்லை. எதையெல்லாம் செய்ய வேண்டுமோ? அதை செய்யாமல் சட்டத்திற்கு புறம்பான செயலில் தமிழக முதல்வர் ஆர்வம் காட்டுகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற விஷயத்தில் தமிழக முதல்வர் கவனம் செலுத்தாவிட்டால் அவரை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். திமுக அரசு செய்கின்ற தவறை புரிய வைத்து மக்களை அரசாங்கத்திற்கு எதிராக தயாரித்து, தமிழக ஆட்சியாளரை ஆட்சியைவிட்டு அகற்றுவதற்கு ஆரம்ப கட்டம் போராட்டமாக ஜூலை 23 ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக போராட்டம் அமையும். தமிழக முதல்வர் நியாயமாக பதவி விலகவேண்டும், சட்டத்துக்கு எதிராக செயல்படமாட்டோம் என்று ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதல்வர் குற்றவாளியே பாதுகாக்கலாமா அவருக்கு ஆதரவாக செயல்படலாமா? .
எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்று, ஆபரேஷனுக்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு விசாரணைக் ஒத்துழைக்காமல், செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலை சரியில்லாததால் இலக்கா மாற்றுவதாக கூறிவிட்டு, அமலாக்கத் துறையில் விண்ணப்பத்தின் பேரில் விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவர் அமைச்சராக தொடர்ந்து வருகிறார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் உடனடியாக விடுவித்திருக்க வேண்டும். குற்றவாளி விசாரணை கைதி, சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அமைச்சராக வைத்திருக்கிறார் என்றால் இந்த குற்றத்திற்கு முதல்வர் துணை போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளியை பாதுகாக்கின்ற முதலமைச்சர், குற்றத்தின் பின்னணியில் தமிழக முதல்வரும் இருக்கிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு வேறாக இருக்கலாம், விசாரிக்கப்பட்டபோது வேறு பல வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ஆணிவேர் முதலமைச்சர் வீட்டில் சென்று நிற்கிறது. செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை நடந்த போது தமிழக முதல்வர் எவ்வாறு துடித்தார்கள். ஆனால் பொன்முடி வீட்டில் சோதனை நடக்கும் போது அவ்வாறு துடிக்கவில்லை. இந்த வழக்கில் பொன்முடி செல்கிறது. ஆனால் செந்தில்பாலாஜியின் வழக்கு தமிழக முதல்வர் வீட்டு வரை செல்கிறது. செந்தில்பாலாஜியின் வழக்கில் ஆணிவேர் முதல்வர் குடும்பத்திற்குள் இருக்கிறது.
முதல் விக்கெட் செந்தில்பாலாஜி, அடுத்த விக்கெட் பொன்முடி தொடர்ந்து 15 விக்கெட்கள் விழப்போகிறது. 15 அமைச்சர்கள் வெவ்வேறு வழக்குகளில் ஜெயிலில் இருக்கப் போகிறார்கள். ஜெயிலில் மந்திரிசபை நடத்தப் போகிறீர்களா?. மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் குற்றவாளி கூண்டில் ஏறுவர் நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்கும். கர்நாடக தேர்தலின்போது மேகதாது அணை கட்டவேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவும் இல்லை, எங்கும் பேசவில்லை, காங்கிரஸ் கட்சியின் உறவு வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் உடன் இணைந்து போய் அனுமதி அளித்து விடுவீர்கள் என்ற பயம் இருந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து செந்தில்பாலாஜி தப்பிக்க முடியாது கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி புறப்பட்டு ஜூலை 10 ஆம் தேதி வரை அன்பில் மகேஷ் பொய்யாமொழி எங்கெங்கு போனார், எதைக்கொண்டு சென்றார், யாரையெல்லாம் சந்தித்தார். எதை எங்கு வைத்தார் என்பது வெளியேவரும்” என்று தெரிவித்தார்.